26.6 C
Jaffna
December 6, 2021
முக்கியச் செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையால் கைது!

எல்லைதாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியை சேர்ந்த இரண்டு மீனவர்களை, இந்திய கடற்படை கைது செய்துள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கஜீபன் (24), வீரகுலசிங்கம் நிமலதாஸ் (28) ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் நா.வர்ணகுலசிங்கத்தை தமிழ் பக்கத்திடம் கருத்து தெரிவிக்கையில், “மிகவும் கஸ்டப்பட்ட குடும்பங்களை சேர்ந்த இருவரை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. அவர்கள் பெருமளவு பணம் செலவழித்து 15 நாளின் முன்னர்தான் தொழிலை ஆரம்பித்தனர். அவர்கள் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை, மீன்பிடியில்தான் ஈடுபட்டார்கள் என இந்திய அரசும் கூறுகிறது. அவர்கள் பதினைந்தரை அடி நீளமான நாட்டுப்படகில்தான் தொழிலுக்கு சென்றனர். நாட்டு படகில் தொழிலில் ஈடுபடும் இரண்டு நாடுகளின் மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிப்பது வழக்கமானது. அவர்களை தடைசெய்ய நாம் ஒரு போதும் கோரியிருக்கவில்லை. எல்லை தாண்டிய இழுவைமடி, தங்கூசி வலை தொழிலையே தடைசெய்யுமாறு கோரி வருகிறோம். எனவே, இந்திய அரசு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்“ என்றார்.

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படை மோதியதில் ஒருவர் உயிரிழந்து, இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் மூடல்… 20 ஆம் திகதி வரை திருமணங்கள் இல்லை: புதிய சுகாதார வழிகாட்டல் குறிப்பு!

Pagetamil

‘முத்துவேல் கருணாநிதி எனும் நான்’ என முதல்வராக பொறுபேற்ற ஸ்டாலின்; கண்கலங்கிய மனைவி!

Pagetamil

வடக்கு, கிழக்கு சிறைகளிற்கு எம்மை மாற்றுங்கள்: தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!