25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

பல்லைகழகங்களை மீள ஆரம்பிப்பது பற்றிய கலந்துரையாடல் இன்று!

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் இன்று பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழுவில் நடைபெறும்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் விவாதிக்கப்படும்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தடுப்பூசி போடப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய அறிக்கைகள் பரிசீலிக்கப்பட உள்ளதாக  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பொலிஸ்காரர் வீட்டுக்கு… காயமடைந்தவர் வைத்தியசாலையில்!

Pagetamil

விபத்தில் காயமடைந்த அரச உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Pagetamil

அதிக பக்தர்கள் கூடிய ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டது: பக்தர்களிற்கும் தனிமை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!