முக்கியச் செய்திகள் விளையாட்டு

நெதர்லாந்தை நொறுக்கியது இலங்கை!

2021 ரி20 உலகக் கிண்ண தொடரின் இறுதி தகுதிச் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்தை நொறுக்கியது இலங்கை.. வெறும் 44 ஓட்டங்களிற்குள் நெதர்லாந்தை சுருட்டி, 7 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நெதர்லாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 10 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

கொலின் ஆக்கர்மேன்11 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தலா 3 ஓவர்கள் வீசிய லஹிரு குமார 3/7, வனிந்து ஹசரங்க 3/9 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். மஹீஸ் தீக்ஷன 1 ஓவர் வீசி 3 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

45 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். பதும் நிசங்க டக் அவுட்டானார்.

ஆட்டநாயகன் லஹிரு குமார.

அதன்படி, முதற்சுற்று போட்டிகளில் இலங்கை ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பேசிப்பழகலாம்… வாங்க: ஆசிரியர்களை அழைக்கிறார் நாமல்!

Pagetamil

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க?

Pagetamil

யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?: அரச அதிபர் அதிரடி தகவல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!