28.4 C
Jaffna
December 5, 2021
முக்கியச் செய்திகள்

வட்ஸ்அப் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் பெகாஸ் செயலி இலங்கையிலும் பயன்பாட்டிலா?: நாடாளுமன்றத்தில் சம்பிக்க வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

வட்ஸ்அப் உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் பெகாஸ் செயலியை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் பயன்படுத்துகிறதா என்ற அதிர்ச்சி கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பினார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.

இன்று நாாளுமன்றத்தில் உரையாற்றும் போது இந்த கேள்வியை எழுப்பினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றிய போது,

நான் பெருநகர அமைச்சராக இருந்த போது 150 மில்லியன் ரூபாவை முறையற்ற விதமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக அரச ஊடகங்கள் வழியாக பெருமெடுப்பிலான பிரச்சாரம் செய்யப்பட்டது. எனினும், விசாரணைக்கு அழைத்த சிஐடியினர் 75 மில்லியன் ரூபா தொடர்பாகவே வினவினர்.

என்னிடம் அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைய, 2018, 19 இல் என்னுடைய தொலைபேசி உரையாடல்களை அவர்கள் செவிமடுத்திருந்தது எனக்கு புரிந்தது. குற்றவியல் சட்ட ஏற்பாடுகளிற்கு அமைய இப்படியான தொலைபேசி உரையாடல்களை செவிமடுப்பதற்கான அனுமதியை நீதிமன்றத்தில் பெற வேண்டும்.

என்னுடைய தொலைபேசி உரையாடலை செவிமடுக்க நீதிமன்ற அனுமதி பெற்றீர்களா என கேட்டேன். அப்போது குற்றவியல் திணைக்களத்தின் பிரசாத் ரணசிங்க என்பவர் சொன்னார், தனக்கு வழங்கப்பட்டதாக.

இது நீதிவானின் அனுமதியின்றி செயற்படுத்தப்பட்டது. குற்றவியல் திணைக்களத்தினால் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.

நீதிமன்ற கட்டளையில்லாமல் எமது தொலைபேசி உரையாடல்களை தொலைபேசி நிறுவனங்கள் வழங்கியது காரணமாக, தொலைபேசி நிறுவனங்களும் எனது உரிமையை மீறியுள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தொலைபேசி நிறுவன உரிமையாளர்களை பாராளுமன்றத்திற்கு வரவழைத்து இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்.

உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றை அவர்கள் இழைத்துள்ளனர். இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் அறிக்கை பெறப்பட்டு, அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

நான் வட்ஸ் அப் உரையாடல்களையே செய்தேன். எமக்கு தெரிந்த தொழில்நுட்ப அறிவின்படி, இந்த வட்ஸ்அப் உரையாடல்கள் தரவுகளாகவே பரிமாறப்படும். சாதாரணமாக அதை ஒட்டுக்கேட்க முடியாது.

ஆனால் அண்மையில் இஸ்ரேலின் பெகாஸ் செயலி மூலம் இந்தியாவின் ராகுல் காந்தி உள்ளிட்டவர்களின் தொலைபேசி வட்ஸ்அப் உரையாடல் செவிமடுக்கப்பட்டிருந்தது.

இஸ்ரேலின் அந்த பெகாஸ் செயலி இலங்கை குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திடம் உள்ளதா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Related posts

இரவு 10 மணியின் பின் ஒன்றுகூடல்களிற்கு தடை!

Pagetamil

21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க ஆலோசனை!

Pagetamil

இராணுவப் பாணி ஆட்சியையே மக்கள் விரும்பினர்; விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து சேதன பசளை முறைக்கு தள்ள முடியும்; ஆனால் நான் அப்படியல்ல: கோட்டா!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!