25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

அபிவிருத்தி குழு தலைவரின் கூட்டத்தில் கூறப்பட்ட விடயம் பொய்த்தது

வவுனியாவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. திலீபன் நடத்திய கூட்டத்தில் 80 வீத பாடசாலைகள் திறக்கும் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அது பொய்த்துப்போயுள்ளது.

அதிபர் ஆசிரியர்கள் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் பாடசாலையை ஆரம்பிப்பது தொடர்பில் அபிவிருத்தி குழு தலைவரினால் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது பாடசாலைகள் 21 ஆம் திகதி அதிபர் ஆசிரியர்களுடன் திறக்கப்படும் எனவும் அது 80 வீதமாக இருக்கும் எனவும் கல்வித்திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று 21 ஆம் திகதி வவுனியாவில் ஒரு சில பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகள் மூடப்பட்டிருந்தது.

இதனூடாக அபிவிருத்தி குழு தலைவர் நடத்திய கூட்டம் பொய்த்துப்போயுள்ளதாக பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வந்தான் வரத்தான்கள் முஸ்லிம்களை வழிநடத்த அனுமதிக்க முடியாது: ஹரீஸ்!

Pagetamil

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட 3 இராணுவத்தினர் கைது!

Pagetamil

தாக்கப்பட்ட வீடியோ வெளியான விவகாரம்: தற்கொலை செய்த இளைஞனிற்கு கொரோனா!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!