29.2 C
Jaffna
April 28, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

900 ஆண்டுகள் பழைமையான சிலுவைப் போர் வீரனின் வாள் கண்டுபிடிக்கப்பட்டது!

சுமார் 900 ஆண்டுப் பழைமை வாய்ந்த வாள் ஒன்று மத்தியதரைக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது சிலுவைப் போர் வீரருக்குச் சொந்தமானது என்று நம்பப்படுகிறது.

இஸ்ரேலுக்கு அப்பால் உள்ள கடலில் முக்குளிப்பாளர் ஒருவரால் அந்த வாள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வாள் 900 ஆண்டுகளுக்கு முன்பு புனித நிலத்திற்கு பயணம் செய்து, சிலுவைப் போரில் ஈடுபட்ட ஒரு குதிரை வீரருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது,

பண்டைய துறைமுகமான ஹைஃபா நகருக்கு அருகே உள்ள வளைவான- பாதுகாப்பான பகுதியில் இந்த வாள் மீட்கப்பட்டது. அங்கு கடலோடிகள் அடைக்கலம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அங்கு மதிப்பு மிக்க தொல்லியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

அது பல ஆண்டுகாலமாக வணிகக் கப்பல்கள் வந்துசென்ற இடம் என்பதால் பல விலைமதிப்பற்ற தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இன்னும் அங்கு இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மீற்றர் நீளமுள்ள அந்த வாள் சுத்தம் செய்யப்பட்டபின் காட்சிக்கு வைக்கப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனக்கு ஏற்பட்ட நிதி இழப்பீட்டுக்கு கோட்டா, மஹிந்தவிடம் நட்டஈடு கோரும் வர்த்தகர்!

Pagetamil

’39 வயது கணவர் என்னை ராணியை போல பார்த்துக் கொள்கிறார்’; 73 வயது மனைவி நெகிழ்ச்சி: வாரத்தில் 6 முறை உல்லாசமாம்!

Pagetamil

இறுக்கமான ஆடை அணிந்த ரிக்ரொக் வீடியோ வெளியிட்டு பிரபலமான பெண் சுட்டுக்கொலை!

Pagetamil

கடந்த ஆண்டு காணாமல் போன தாய்லாந்து மொடல் அழகி சடலமாக மீட்பு!

Pagetamil

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்: பாலஸ்தீனத்திலுள்ள இடிபாடுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவை!

Pagetamil

Leave a Comment