28.4 C
Jaffna
December 5, 2021
உலகம் முக்கியச் செய்திகள்

சிரிய இராணுவப் பேருந்தில் குண்டுவெடிப்பு: 14 இராணுவத்தினர் பலி!

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் ராணுவம் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 14 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் காயமடைந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.

புதன்கிழமை அதிகாலை நடந்த தாக்குதல், டமாஸ்கஸில் பல வருடங்களில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும்.

சிரியாவின் 10 வருட மோதலில் எதிர்க்கட்சிப் போராளிகளின் வசமிருந்த எல்லை பகுதிகளை அரசுப் படைகள் கைப்பற்றிய பின்னர் நடத்தப்பட்ட ஒரு அரிய சம்பவமாகும்.

சிரிய அரசு தொலைக்காட்சி மத்திய டமாஸ்கஸில் எரிந்த பேருந்தின் காட்சிகளைக் காட்டியது, மக்கள் வேலை மற்றும் பள்ளிக்குச் செல்லும் போது பரபரப்பான நேரத்தில் இந்த தாக்குதல் நடந்ததாகக் கூறியது.

பேருந்து ஹபீஸ் அல்-அசாத் பாலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. மூன்றாவது வெடிகுண்டை இராணுவ பொறியியல் பிரிவு செயலிழக்கச் செய்தது,

இது “பயங்கரவாத” குண்டு வெடிப்பு தாக்குதல் என்று அதிகாரிகள் கூறினர்.

பேருந்தில் வைக்கப்பட்ருந்த வெடிகுண்டுகளே வெடித்தன. இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

நாட்டின் வடக்கே மட்டுப்படுத்தப்பட்டளவில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் மற்றும்  நாட்டின் பரந்த பாலைவனப் பகுதியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர், இராணுவத்துடன் மோதல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த குழுக்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தெற்கு இட்லிப் பகுதியில் ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நகரை குறிவைத்து கடும் பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில். குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

3D முறையில் அச்சிடப்பட்ட கருவிழியைப் பெற்ற முதல் மனிதர்!

Pagetamil

எதிர்ப்பை ஒருபோதும் கைவிட மாட்டேன், ஆப்கானியர்கள் உரிமைகளுக்காக போராடுவதில் சோர்வடைய மாட்டார்கள்: மசூத்

Pagetamil

இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா; மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவு செயலர் திடீர் விசிட்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!