28.9 C
Jaffna
June 26, 2022
குற்றம்

பேசாலையில் 20 கிலோ கேரள கஞ்சா மீட்பு: சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவர் கைது!

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை 8 ஆம் வட்டார பகுதியில், சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று திங்கட்கிழமை (19) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

-பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்பில், மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பல்லேவல மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்க ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து செயல்பட்டு குறித்த பகுதிக்குச் சென்று குறித்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதோடு, சந்தேக நபரான பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேசாலை பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இந்தியாவிலிருந்து கஞ்சா, மஞ்சள் கடத்தி வந்த 2 பேர் பருத்தித்துறை கடலில் சிக்கினர்!

Pagetamil

ஜில் பற்றி தகவல் வழங்கினால் 2.5 மில்லியன் ரூபா பணப்பரிசு!

Pagetamil

தடை செய்யப்பட்ட தங்கூசி வலை மீட்பு

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!