இலங்கை

வடக்கு மாகாண புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா திருக்கேதீஸ்வர ஆலயத்தில் வழிபாடு!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா,நேற்று சனிக்கிழமை மதியம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதியால் வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமையை அவர் ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், அவர் நேற்று (16) சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர், திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக் கேணியில் குடத்தில் நீரெடுத்து சிவலிங்கப் பெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வலி மேற்கு பிரதேசசபை உறுப்பினர்களிற்கு இலங்கை சட்டங்களை நினைவுபடுத்த தவிசாளர் எடுக்கும் நடவடிக்கை!

Pagetamil

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்!

Pagetamil

இன்று விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!