25.4 C
Jaffna
January 19, 2022
முக்கியச் செய்திகள்

உள்நாட்டு பால்மாக்களின் விலையும் எகிறியது!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. அதன்படி, ஹைலண்ட் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவினால் அதிகரித்து, 470 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

ஒரு கிலோகிராம் பால்மா விலை 225 ரூபாவினால் அதிகரித்து, 1,170 ரூபாவாக விற்கப்படும்.

இதேவேளை, பெல்வத்த நிறுவனமும் பால்மாவின் விலையை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 400 கிராம் பால்மா விலை, தற்போது 460 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 250 ரூபாயினால் அதிகரிக்க கடந்த 9ஆம் திகதி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Related posts

‘இராணுவமும், விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர்’: மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் அரசு கட்சி ஆவணம் அனுப்புகிறது!

Pagetamil

மீண்டும் மிரட்டிய மே.இ தொடக்க ஜோடி: 2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது!

Pagetamil

யாழில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!