31.9 C
Jaffna
April 28, 2024
இலங்கை

சுகாதார வழிகாட்டுதல்களில் மேலும் தளர்வு!

நாளை (15) முதல் திருமணங்கள், இறுதி சடங்குகள், உணவகங்கள், கூட்டங்கள், பற்றறைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் தளர்த்தப்படவுள்ளன.

தளர்வுகளை மேற்கொள்ளபட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, திருமண மண்டபத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண மண்டபத்தில், மதுபான பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து திருமணங்களும் பதிவு திருமணங்களாக மாத்திரமே நடத்த முடியும்.

இதற்கிடையில், ஒரேநேரத்தில் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை, 15ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய வழிகாட்டுதல்களின் படி, பல விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உணவகங்களில், இருக்கை திறனுக்கமைய, 30 சதவீதம் வரை, மக்களை உணவருந்த இடமளிக்கலாம். ஆனால், மதுபானம் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டங்கள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை, அதிகபட்சம் 50 பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு மண்டபத்தில் நடத்தலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

யாழில் போதை ஊசி ஏற்றப்பட்டு சீரழிக்கப்பட்ட பெண்: சூத்திரதாரியான சகோதரனுக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment