28.1 C
Jaffna
October 24, 2021
கிழக்கு

திருகோணமலையில் வேட்டையாடப்படும் சுறாக்கள்!

திருகோணலை கடற்பிரதேசத்தில் சுறா மீன்கள் வேட்டையாடப்படுவது தொடர்பாக வெளியான தகவலையடுத்து, மீன்பிடி திணைக்களம் விசாரணையை தொடங்கியுள்ளது.

திருகோணமலையில் உள்ளூர் சுறா இனங்களை மீனவர்கள் கொல்வதாக கடல் பாதுகாப்பு குழுவான, த பேரள் புரடக்டர்ஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

“இந்த குற்றம் திருகோணமலையில் நடக்கிறது. ஒரு காலத்தில் கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தின் இடமாக இருந்த பிரதேசத்தில், மீனவர்கள் உள்ளூர் சுறா இனங்களை அதிகளவில் கொல்வதால், இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன ”என்று அந்த அமைப்பு இறந்த சுறாக்களின் படத்துடன் ருவிட்டரில் பதிவு செய்திருந்தது.

திருகோணமலையில் சட்டவிரோதமாக சுறா மீன்பிடிப்பது தொடர்பான விவகாரம் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விஜேசேகர, மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் திருகோணமலைக்கு சென்று இது தொடர்பாக விசாரணை செய்வார்கள் என்றார்.

ஆரம்ப விசாரணைகள் முடிவடைந்தவுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் திறக்கும் நேரம் அறிவிப்பு: மத வழிபாடுகளிற்கு அனுமதியில்லை!

Pagetamil

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் கொரோனா தாண்டவம்!

Pagetamil

கல்முனை அநிதிமன்றம்: எழுத்துப்பிழையுடன் போராட்டத்திற்கு தடையுத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!