ரஜினிகாந்த் நடித்திருக்கும் அண்ணாத்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ஆம் திகதி வெளியாகிறது.
இந்நிலையில் அண்ணாத்த டீஸர் ஒக்டோபர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. அறிவித்தபடி டீஸரை வெளியிட்டுள்ளனர்.
கிராமத்தான குணமாத்தானே பாத்திருக்க, கோபப்பட்டு பார்த்தது இல்லையே என்று ரஜினி கூறுவதுடன் டீஸர் துவங்குகிறது. காட்டாறு அவனுக்கு கரையும் கிடையாது, தடையும் கிடையாது என்று கூறி ரவுடிகளை அடித்து துவம்சம் பண்ணுகிறார் ரஜினி.
டீஸர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1