28.1 C
Jaffna
October 24, 2021
உலகம்

வாழைக்குலை விழுந்து காயமடைந்தவருக்கு 500,000 டொலர் இழப்பீடு: அவுஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வாழைக்குலை விழுந்து காயமடைந்த தொழிலாளிக்கு 500,000 டொலர்கள் இழப்பீடு வழங்கும்படி, அவரது முன்னாள் முதலாளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவுஸ்திரேலியா, குயின்ஸ்லாந்தில் இந்த சம்பவம் நடந்தது.

கெய்ர்ன்ஸின் வடக்கே, குக்டவுனுக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் பணியாற்றிய போது ஜெய்ம் லாங்போட்டம் காயமடைந்தார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக நீடித்த வழக்கில், தற்போது இழப்பீடு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு மரத்தை வெட்டும் போது தெளிவாக நிற்கத் தவறிய அலட்சியத்திற்காக, இழப்பீட்டிலிருந்து 55,000 டொலர்களை தள்ளுபடி செய்து, தலைமை நீதிபதி கேத்தரின் ஹோம்ஸ் உத்தரவிட்டார்.

L&R Collins என்ற நிறுவனம் நடத்தும் வாழைப் பண்ணையில் ஜெய்ம் லாங்பாட்டம் பணிபுரிந்தார்.

அங்கு வாழை மரத்திலிருந்து ஒருவர் வாழைக்குலையை வெட்டி போடுவார். அதை கீழேயிருந்து பிடிக்கும் வேலையை ஜெய்ம் லாங்பாட்டம் செய்து வந்தார்.

2016ஆம் ஆண்டு, 70 கிலோகிராம் வாழைக்குலையை பிடித்த போது, ஜெய்ம் லாங்பாட்டம் தவறி விழுந்தார்.

அந்த நாளில் அவர் குக்டவுனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சையின் பின்னர் அவரால் விவசாய வேலைக்கு திரும்ப முடியவில்லை.

சம்பவத்தின் போது 30 வயதாக இருந்த லாங்போட்டம், காயமடைந்த நாளிலிருந்து வேலை செய்யவில்லை. அவரது வலது இடுப்பு மற்றும் வலது தோள்பட்டை பாதிக்கப்பட்டு, அவருக்கு மனநலக் காயத்தை ஏற்படுத்தியது.

அவர் இனி உழைக்கும் வேலையைச் செய்ய முடியாது என்றார்.

பண்ணை அலட்சியமாக இருந்தது என்று லாங்க்போட்டம் வாதிட்டார். சாதாரண மரங்களை விட உயரமான வாழைமரங்களில் வாழைக்குழை வெட்டுவது குறித்த முறையான பயிற்சி, வாழைக்குலையை வெட்டுபவருக்கு வழங்கப்படவில்லையென்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

குறுக்கு விசாரணையின் போது லாங்க்போட்டம், வாழைக்குலையின் எடை 70 கிலோவாக இருக்கும் என்று மதிப்பிட்டார்.

தலைமை நீதிபதி ஹோம்ஸ் தனது தீர்ப்பில், லாங்க்போட்டமின் நிகழ்வுகளை நினைவுகூருவது முற்றிலும் நம்பகமானதா என்று தனக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறினார். வாழைக்குலை வெட்டுபவருக்கு முறையான பயிற்சியின்மை அல்லது திறமை இல்லாமையால், வாழைக்குழை முறையான எச்சரிக்கையின்றி விழுந்த சாத்தியத்தை ஏற்றுக்கொண்டார். வெட்டுபவரின் அலட்சியத்தையும் ஏற்றுக்கொண்டார்.

இதனால், லாங்க்போட்டத்திற்கு 558,600.36 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

“வாழைக்குலை திடீரென கீழே விழுந்தால், கீழே நிற்பது ஆபத்தானது என்பது தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். லாங்க்போட்டம் ஒரு வெளிப்படையான ஆபத்தை புறக்கணித்தார் மற்றும் அவரது சொந்த பாதுகாப்பிற்காக நியாயமான கவனிப்பை எடுக்கத் தவறிவிட்டார்.” என கூறி, இழப்பீட்டில் 10 சதவீதம் அல்லது 55,860.04 டொலர்கள் குறைக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தடுப்பூசி பயத்தை போக்க களமிறங்கும் சுப்பர் ஹீரோ!

Pagetamil

கொலம்பியாவில் இராணுவத்தின் பிரமாண்ட கட்டிடம் இடிப்பு!

divya divya

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் முதல் சர்வதேச தடுப்பூசி கடப்பிதழ்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!