25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

பெண் இராணுவ குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கட்டி கையளிப்பு

பெண் இராணுவ குடும்பத்திற்குகுடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கட்டி இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் இவ்வாறு படையினரால் வீடு முழுமையாக்கப்பட்டு இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

குறித்த கையளிப்பு நிகழ்வு இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, குறித்த பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடு இராணுவத்தினரின் நிதி மற்றும், ஆளணியுதவியுடன் பூரணப்படுத்தப்பட்டு இன்றைய தினம் கையளிக்கப்படது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய கலந்துகொண்டு வீட்டினை கையளித்ததுடன், அன்பளிப்பு பொருட்களையும் வழஙிகியிருந்தார். தொடர்ந்து மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

இதேவேளை குறித்த நிகழ்வில் 72வது இராணுவ தினத்தையொட்டி 20 குடும்பங்களிற்கு 2000 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய , 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்த்தன, பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இராணுவ சேவையில் இணைந்து 8 வடங்களாக சேவையில் ஈடுபட்டுள்ள குறித்த பெண் இராணுவ குடும்பத்திற்கு இவ்வாறு வீடு கட்டி கையளிக்கப்பட்டுள்ளதுடன், தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

இளைஞர்கள் தடுப்பூசி சலுத்தாதது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்!

Pagetamil

பின்வாங்கும் கொத்தலாவல!

Pagetamil

பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!