28.5 C
Jaffna
October 22, 2021
இலங்கை

பிள்ளைகளிற்கு தொலைபேசி கொடுக்காதீர்கள்; கேமுக்கு அடிமையான ஒரே மகனை பறிகொடுத்த பெற்றோர் கதறல்!

இணையவழி கற்கைக்காக கடன் அடிப்படையில் மகனிற்கு ஸ்டார்ட் தொலைபேசியொன்றை வாங்கிக் கொடுத்தேன். அவர் படிப்பை விட்டுவிட்டு, இணைய விளையாட்டுக்களிற்கு அடிமையாகி விட்டார். இதனாலேயே அவர் உயிரையும் விட்டுள்ளார். பெற்றோரிடம் காலில் விழுந்து வேண்டுகிறேன், பிள்ளைகளுக்கு தொலைபேசியை கொடுக்காதீர்கள் என கதறி அழுகிறார் மோலி விக்ரமாராச்சி.

அவரது ஒரே மகன் இசுரு அஷென் (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இருசு அஷேன்,  வீட்டு சமையலறையுடன் அமைந்திருந்த கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் நேற்று முன்தினம் (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெற்றிலைக் கூறு விற்று தனது மகனின் கல்வி நடவடிக்கைகாக மாதாந்தம் பணம் செலுத்தும் வகையில் தவணை முறைக்கு 33,000 ரூபா தொலைபேசி ஒன்றை உயிரிழந்த மாணவரின் தந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

மோலி விக்கிரமாராச்சி (46) மற்றும் அசோக ரஞ்சனி (43) தம்பதிக்கு ஒரே மகன் இசுரு அஷென். எனவே மகனில் அதீத அக்கறை காண்பித்து வந்துள்ளனர்.

“மகனின் பழைய தொலைபேசி இரண்டு முறை உடைந்தது, எனவே ஆன்லைனில் கல்வியை தொடர அவருக்கு ஒரு புதிய தொலைபேசி கொடுக்கப்பட்டது. நான் ரூ .33,000 மதிப்புள்ள போனை ஆறு மாத தவணை கட்டண அடிப்படையில் வாங்கினேன். அவரது ஒன்லைன் கல்வி முடிந்த பிறகும்,  தொலைபேசியில் இருந்தார். அவரது ஆன்லைன் கல்வியை இழந்த பிறகும், அவரது மகன் தொலைபேசியில் இருந்தார். ஆனால் எங்கள் மகன் இப்படி ஒரு துயரத்தை அனுபவிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.“ என தந்தை கண்ணீருடன் தெரிவித்தார்.

“நேற்று முன்தினம் (11 ம் தேதி) மதியம் நானும் என் மகனும் மட்டுமே வீட்டில் இருந்தோம்.
மனைவி வேலைக்கு சென்று விட்டார். இருவரும் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டு டிவி பார்த்தோம். அப்போது அவர் தொலைபேசியில் கேம் விளையாடுவதைப் பார்த்தேன்.
நண்பகலில் நாங்கள் இருவரும் சாப்பிட்டோம். நண்டு சமைக்கப்பட்டது.  மகன்  ஆர்வத்துடன் சாப்பிட்டான்.

பின்னர் மகன் அறைக்குள் போனான். படுக்கப் போவதாக நினைத்தேன்.

மதியம் 2.45 மணியளவில் கீழ் கடையில் இருந்து எனக்கு போன் ஒன்று வந்தது. வெற்றிலைக்கூறு ஒன்று கூட இல்லை என்று. நான் மகனை அழைத்து, விரைவாக வெற்றிலைக்கூறு கொஞ்சம் சுற்ற வேண்டும் என்றேன். அப்பா பாக்குகளை வெட்டி தாருங்கள் நான் விரைவாக வெற்றிலைக் கூறு சுற்றுகிறேன் என மகன் கூறினார். நான் வெற்றிக்கூறுகளை பையில் போட்டுக் கொண்டு வௌியேறும் போது மகனும் பின்னாலேயே வந்தார். பின்னர் நான் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன்.

சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் வீட்டுக்கு வந்து மகன் என்று அழைத்த போது பதில் வரவில்லை. வழமையாக நான் வீட்டுக்கு வந்து மகனை அழைக்கும் போது எங்கிருந்தாலும் அப்பா என குரல் கொடுக்கும் பழக்கத்தை மகன் கொண்டிருந்தார். நான் அறைக்கு சென்று பார்த்தேன் அங்கு மகன் இருக்கவில்லை. பின்னர் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது, மகன் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

மகனின் கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்ற முற்பட்டேன். எனினும் என்னால் அதை செய்ய முடியவில்லை. அயலவர்களை உதவிக்கு அழைத்தேன். 5 நிமிடங்களின் பின்னர் மகனை ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மகன் இறந்து விட்டார்“ என்றார்.

திடீர் மரணம் குறித்த விசாரணையின் போது, ​​பாணந்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் மாணவனின் அறையில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 50 பயன்படுத்தப்பட்ட டேட்டா கார்டுகளையும், அவரது கைண்டறிந்தனர்.

மாணவனின் கையடக்க தொலைபேசியை சோதித்தபோது, ​​அதில் உள்ள ஐநூறு புகைப்படங்களில் கிட்டத்தட்ட 99%வீதமானவை, தொலைபேசி விளையாட்டுக்களுடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சொற்றொடர்கள் இருந்தன என்று ஒரு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, மாணவன் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தமை தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
8

Related posts

விவேக் நினைவாக கிளிநொச்சியில் மரக்கன்று நாட்டல்!

Pagetamil

போக்குவரத்து குற்றங்களிற்கான அபராதம் செலுத்தும் கால எல்லை நீடிப்பு!

Pagetamil

மேலும் 45 கொரோனா மரணங்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!