28.1 C
Jaffna
October 24, 2021
இந்தியா

கடுமையான எதிர்ப்பையடுத்து யொஹானியுடனான புகைப்படத்தை நீக்கிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்!

இலங்கைப் பாடகி யொஹானி டி சில்வாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட ருவிட்டர் பதிவை, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நீக்கியுள்ளார்.

தமிழகத்தில் கிளம்பிய கடுமையான எதிர்ப்பையடுத்து அவரது ருவிட்டர் பதிவு அகற்றப்பட்டுள்ளது.

பாடகி யொஹானியுடன் ஹாரிஸ் ஜெயராஜ், மதன் கார்க்கி எடுத்த புகைப்படத்தை, ஹாரிஸ் ஜெயராஜ் தனது ருவிட்டரில் பதிவிட்டார்.

யொஹானியின் தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தின் 55, 59வது படையணிகளை வழிநடத்தியவர் என்ற அடிப்படையில், யுத்தத்தின் இறுதியில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்களில் அவரும் பொறுப்புக்கூற வேண்டியவர் என ருவிட்டர் வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மெனிகே மகே ஹித்தே என்ற பாடலின் மூலம் ஓரிரவில் யொஹானி பிரபலமடைந்தார்.

அதை தொடர்ந்து, வட இந்தியாவில் பல வாய்ப்புக்களை பெற்ற யொஹானி, அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கானுடன் கலந்து கொண்டிருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஜின் பதிவு வெளியானதும் பரவலான எதிர்ப்பு கிளம்பியது.

“பிரபாகரனிற்கு மகனாக பிறந்ததால் தான் 13 வயதில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார். இப்போது, ​​கொலையாளியின் மகள் தமிழ்நாட்டில் பாடகியாக வருகிறார். நன்றி தமிழ் நாடு” என ஒரு பயனர் தனது கருத்தை எழுதினார்.

மற்றொருவர் தனது தந்தையின் தியாகத்தைப் பற்றி யொஹானி பாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
2
+1
1

Related posts

அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கோரிய கமல்!

Pagetamil

கொரோனா வார்டில் ஜன்னல் வழியே தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் : காப்பாற்றிய பணியாளர்கள்!

divya divya

ஊரடங்கு எதிரொலியால் பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி! (VIDEO)

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!