28.1 C
Jaffna
October 24, 2021
உலகம்

விமானப் பணிப்பெண்களின் இறுக்கமான ஆடைகள், குதி உயர்ந்த காலணிகள் நீக்கம்!

உக்ரேனிய விமான நிறுவனமான SkyUp ஏர்லைன்ஸ், தமது விமான பணிப்பெண்களின் சீருடையிலிருந்து குட்டைப் பாவாடைகளையும் குதிகால் காலணிகளையும் நீக்குகிறது.

இனிமேல், விமான ஊழியர்கள் உடலை இறுக்கிப் பிடிக்காத வசதியான உடைகளை அணிவார்கள்.

விமானங்கள் அசம்பாவிதத்தைச் சந்திக்கும் போதோ, தண்ணீரில் தரையிறங்கும் போதோ, சிப்பந்திகளின் கூர்மையான காலணிகள் ஏணியைச் சேதப்படுத்தக்கூடும் என்ற கவலை நிலவியது.

மேலும் நீந்தும் சூழலுக்கு அவர்களது உடை ஏற்றதல்ல என்ற குறையும் இருந்தது.

சில நேரங்களில் விமானத்தில் உட்கார ஒரு நிமிட ஓய்வு கூடக் கிடைப்பதில்லை என்று 7 ஆண்டுகளாக நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் மூத்த விமானப் பணிப்பெண் ஒருவர் கூறினார்.

மணிக்கணக்காகக் குதிகால் காலணிகளை அணிந்து பணிசெய்வதால், எப்போது தனது வீங்கிய கால்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்று அவர் ஏங்குவாராம்.
நிறுவனம், சீருடை பற்றி ஊழியர்களிடமிருந்து கருத்துகளைச் சேகரித்தபோது, குதிகால் காலணிகளுக்கும் குட்டைப் பாவாடைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ஆண்குறிகளை பெரிதாக்க யூடியூப்பை பார்த்து சிகிச்சை செய்தவர்களிற்கு நேர்ந்த கதி!

Pagetamil

தலிபான்களிடம் சரணடையும் ஆப்கான் இராணுவ வீரர்கள்; அச்சுறுத்தல் நிறைந்த பகுதிக்கே நேரில் சென்ற ஜனாதிபதி!

Pagetamil

இரட்டை குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!