29.5 C
Jaffna
March 28, 2024
சினிமா

குடியிருந்த வீட்டை சமந்தாவுக்கு கொடுத்துவிட்டு, புது பங்களா வாங்கிய நாக சைதன்யா

சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். தங்களின் நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டனர்.

சமந்தாவை பிரிவது என்று முடிவு செய்ததுமே வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கியிருக்கிறாராம் நாக சைதன்யா.

இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் பங்களா வாங்கியிருக்கிறார் நாக சைதன்யா என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த பங்களாவை சீரமைக்கும் பணி நடந்து வருகிறதாம். அந்த வேலை முடிந்த பிறகு குடியேறுவாராம் நாக சைதன்யா.

சமந்தா தற்போது தங்கியிருக்கும் பங்களாவை அவரும், நாக சைதன்யாவும் சேர்ந்து வாங்கினார்கள். ரூ. 6 கோடி மதிப்புள்ள அந்த பங்களாவை சமந்தாவுக்கு கொடுத்துவிட்டாராம் நாக சைதன்யா.

எனக்கும், சமந்தாவுக்கும் கள்ளத்தொடர்பா?: டிசைனர் ப்ரீத்தம் விளக்கம்
இதற்கிடையே தனக்கும், சமந்தாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இல்லை என்று ஆடை வடிவமைப்பாளரான ப்ரீத்தம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார். சமந்தா எனக்கு அக்கா மாதிரி, இது சைதன்யாவுக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது அவர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று ப்ரீத்தம் கேள்வி எழுப்பியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ முதல் சிங்கிள்

Pagetamil

வெளிநாட்டுக்காரரை இரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்ஸி

Pagetamil

“இது தேர்தல் நேரம்… மூச்சுவிடக் கூட பயமாக உள்ளது!” – ரஜினிகாந்த்

Pagetamil

மிரட்டும் பிரமாண்டத்துடன் சூர்யாவின் ‘கங்குவா’ டீசர்

Pagetamil

புதிய படத்தில் விஜய் சம்பளம் ரூ.250 கோடி?

Pagetamil

Leave a Comment