28.1 C
Jaffna
October 25, 2021
மலையகம்

ஆளும், எதிர்க்கட்சிகள் நடு வீதியில் மல்லுக்கட்டல்: நாவலப்பிட்டியில் போர்க்களம்!

நாவலப்பிட்டிய ஜயதிலக மைதானத்தில் அமைக்கப்படும் நடைபாதையை பார்வையிட சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களிற்கும்,  ஆளும்கட்சிக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று (12) பகல் இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.

20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் நடைபாதை திட்டத்தை பார்வையிடுவதற்காக நாவலப்பிட்டி நகரசபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளருமான ஷசங்க சம்பத், நாவலப்பிட்டி நகரசபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  சென்றுள்ளனர்.

எனினும் மைதானத்துக்குள் உள்நுழையும் பிரதான வாயில் நகரசபையினரால் பூட்டப்பட்டிருந்ததால், அவர்கள் மைதானத்துக்கு அருகில் காத்திருந்தனர்.

இதன்போது நாவலப்பிட்டி நகரசபையின் தற்போதைய தவிசாளர் அமல் பிரியங்கர உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, இறுதியில் கைகலப்பில் முடிந்துள்ளது.

இரு தரப்பு மோதலை கட்டுப்படுத்த நாவலப்பிட்டி பொலிஸார் தலையிட்டும், நிலைமையை சுமுகமாக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் இருதரப்பினரும் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மூவர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய 16 வயது சிறுமிக்கு நியாயம் கோரி டயகமவில் போராட்டம்

Pagetamil

சாரதிக்கு நித்திரை கலக்கம்?: நடுவீதியில் உயிரிழந்த யுவதி!

Pagetamil

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் இருக்கின்றது – இ.தொ.கா

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!