28.1 C
Jaffna
October 25, 2021
விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை!

ஐ.பி.எல் முதலாவது தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

14வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் ரொப் 4 இடங்களை பிடித்த டெல்லி கப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ரோயல் சலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஓப்’ சுற்றுக்கு முன்னேறின.

இதன்படி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ரொஸ் வென்ற சென்னை அணியின் கப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சீரான இடைவேளியில் டெல்லி அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தாலும், இறுதியில் ரிஷப் பண்ட்-ஹெட்மயர் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஷப் பண்ட் இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 35 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். கடைசியாக டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸ்சை தொடங்கிய சென்னை அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடி இம்முறை ஆரம்பத்திலேயே பிரிந்தது. டு ப்ளஸ்ஸிஸ் ஒரு ரன்னில் வெளியேற, பின்னர் ருதுராஜுடன் ஜோடி சேர்ந்த உத்தப்பா அதிரடி காட்டினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்த நிலையில் உத்தப்பா 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த தாக்கூரும், ராயுடுவும் அடுத்தடுத்து வெளியேற போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. முதலில் நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் பின்னர் அதிரடி காட்டினார். தன் பங்குக்கு 70 ரன்கள் எடுத்த நிலையில் 19வது ஓவரில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் மொயீன் அலி வெளியேறினார். அடுத்த மூன்று பந்துகளையும் டோனி பவுண்டரிக்கு விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார். இரண்டு பந்துகள் எஞ்சியுள்ள நிலையில் 173 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இந்தியா பிறந்தநாடு’ அவங்களுக்கு எதிரா விளையாடப்போறேன்: நியூசிலாந்து ஸ்பின்னர் நெகிழ்ச்சி!

divya divya

இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும்: தினேஷ் கார்த்திக்

divya divya

7 ஓட்டங்களால் இந்தியா வெற்றி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!