26.6 C
Jaffna
December 6, 2021
முக்கியச் செய்திகள்

புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறை மாற்றம் வரும்: ஜனாதிபதி!

சாக்குபோக்கு சொல்லப்போவதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றும், நாட்டு மக்களிடம் வலியுத்தினார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், பொதுமக்களுக்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன என்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் 72வது வருடப் பூர்த்தியையொட்டி, இன்று (10), அநுராதபுரம், சாலியபுரவிலுள்ள கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சாலியபுர கஜபா ரெஜிமென்ட் முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அணிவகுப்பு மைதானத்தை திறந்து வைத்து, இராணுவத்தினரிடம் கையளித்தார். அதன் பின்னர், அணிவகுப்பு மரியாதை ஜனாதிபதி பார்வையிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, உலகிலுள்ள இராணுவத்தினர், யுத்தத்துக்கு மாத்திரமன்றி, தேசத்தைக் கட்டியெழுப்பவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்த அவர், தமது நாட்டின் முப்படையினர், தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற சுகாதாரத் தரப்பினரின் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி, கொவிட் ஒழிப்புக்காகச் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அதற்காக அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.

‘முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் மன உறுதியை அதிகரிக்கச் செய்து, அவர்களுக்கான உத்தியோகபூர்வ அதிகாரங்களை முறையாக வழங்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க, கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் நாட்டுக்குள் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்’ என்று கூறினார்.

மக்களுக்கு உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த அவர், அதற்காக, அனைத்து அதிகாரிகளும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கிழக்கில் தமிழர் பிரதேசத்தில் பிரமாண்ட சிங்கள குடியேற்றம் ஆரம்பம்: எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு!

Pagetamil

ஒற்றுமை முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பு- ஈ.பி.ஆர்.எல்.எவ் பேச்சுவார்த்தை!

Pagetamil

போர்க்குற்றவாளி இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதா?: ராமதாஸ் கண்டனம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!