பிரபல பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதை உறுதி செய்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தான் ரகுலுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானி கூறியிருப்பதாவது,
நீ இல்லாமல், நாட்கள் நாட்களாக இல்லை. நீ இல்லாமல் சுவையான உணவை சாப்பிடுவது கூட பிடிக்கவில்லை. என் உலகமாக இருக்கும் மிக அழகான ஆத்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றார்.
ஜாக்கி பாக்னானியின் வாழ்த்தைபட பார்த்த ரகுல் ப்ரித் சிங் கூறியிருப்பதாவது,
நன்றி என் லவ். நீ தான் இந்த ஆண்டு எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. என் வாழ்க்கையை அழகாக்கியதற்கு, என்னை தொடர்ந்து சிரிக்க வைப்பதற்கு, நீ நீயாக இருப்பதறகு நன்றி என்றார்.
ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் அடிக்கடி டின்னருக்கு வெளியே செல்வது, மும்பையில் ஒருவரின் வீட்டிற்கு மற்றொருவர் வருவதுமாக உள்ளனர். ஆனால் காதலைப் பற்றி மூச்சும் விடாமல் இருந்தார்கள். தற்போது முதன்முறையாக காதலை உறுதி செய்துள்ளார்கள்.
சுமார் ஓராண்டாக அவர்கள் காதலித்து வருகிறார்கள். தற்போது, ஜாக்கி பாக்னானி தயாரித்து வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.