28.1 C
Jaffna
October 25, 2021
ஆன்மிகம்

இந்தவார ராசி பலன் (8.10.2021- 14.10.2021)

 

செவ்வாய், புதன் சாதக நிலையில் உள்ளனர். சிவன் வழிபாடு நலம் அளிக்கும்.
அசுவினி: எதிர்பாராத சந்திப்பு ஒன்று நிகழும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கி வசூலாகும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
பரணி: சொத்து சம்பந்தமான விஷயம் பேச்சின் மூலம் முடிவாகும். பணவரவு நன்றாக இருக்கும். பணியில் ஏற்பட்ட குழப்பங்கள் முடிவுக்கு வரும். குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
கார்த்திகை 1ம் பாதம்: யாரிடமும் போய்ப் பேசி வீண் வம்பில் மாட்ட வேண்டாம். மனதுக்கு நெருக்கமான சிலருடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 9.10.2021 மாலை 3:35 மணி – 11.10.2021 மாலை 5:54 மணி

புதன், சுக்கிரன், குருவால் நற்பலன் உண்டு. முருகன் வழிபாடு நலம் தரும்.
கார்த்திகை 2,3,4: பணியில் நற்பெயர் நிலைநாட்டத் தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புணர்வும் பொறுமையும் இருப்பவர்கள் முன்னேறுவர். பேச்சில் கவனமாயிருங்கள். உழைப்பு அதிகமாகும்.
ரோகிணி: தொழிலில் கணிசமான முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். மருத்துவர், வழக்கறிஞர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவர். இளைஞர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் கூடி வரும்.
சந்திராஷ்டமம்: 11.10.2021 மாலை 5:55 மணி – 13.10.2021 இரவு 8:40 மணி

ராகு, கேது, புதன் நன்மைகளை வழங்குவர். ராமர் வழிபாடு நன்மை தரும்.
மிருகசீரிடம் 3,4: வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணியிடப் பிரச்னைகள் ஒழுங்காகும். சகோதரர்களிடம் ஏற்பட்டு இருந்த மனவருத்தம் நீங்கும். பலரும் உங்கள் உதவியை எதிர்பார்ப்பார்கள்.
திருவாதிரை: தொழில், வியாபாரத்தில் வரவும், வரவுக்கு ஏற்ற செலவும் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவுக்கு செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வது நல்லது.
புனர்பூசம் 1,2,3: மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாக அனுமதிக்காதீர்கள். அதிகம் சிந்தித்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். சிறிய அளவில் உடல் பாதிப்பு ஏற்படலாம்.
சந்திராஷ்டமம்: 13.10.2021 இரவு 8:41 மணி – 15.10.2021 இரவு 12:40 மணி

குரு, சுக்கிரன், புதன் அனுகூல பலன் தருவர். பைரவர் வழிபாடு துன்பம் போக்கும்.
புனர்பூசம் 4: நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் மற்றவர்களுக்குப் பயன்படுவதால் நன்றி பாராட்டுவார்கள். அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். அதை மிகுந்த கவனத்துடன் செய்யுங்கள்.
பூசம்: தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். ஒரு சிலருக்கு முதலீடுகளை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பல காலமாக இருந்த பிரச்னை ஒன்று விலகும்.
ஆயில்யம்: ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும். அளிக்கப்பட்ட பொறுப்பு அல்லது பணி ஒன்றைச் சிறப்பாக முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்களுக்கு நல்ல காலம் ஆரம்பித்து விட்டது.

சூரியன், புதன், சனி அதிர்ஷ்டமான பலன்களை தருவர். மகாலட்சுமி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மகம்: தொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். குடும்பத்தில் புதிய திருப்பம் நிகழும்
பூரம்: புதிய வாய்ப்பின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். வீண் செலவுகள் கட்டுப்படுவதால் நிம்மதியடைவீர்கள். நல்லவர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீ்ர்கள்.
உத்திரம் 1: பல காலம் அறிய விரும்பிய உண்மை ஒன்று வெளிப்படும். உங்களால் நண்பருக்கு உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உற்சாகமுடன் வேலை செய்து பாராட்டு பெறுவீர்கள்.

குரு, சந்திரன் புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். துர்கை வழிபாடு நிம்மதி தரும்.
உத்திரம் 2,3,4: வீடு, வாகனத்துக்கான பராமரிப்புச் செலவு குறையும். கலகலப்பாகப் பொழுது போகும். குடும்பத்தில் ஒருவரின் உடல் நிலை பற்றி இருந்த கவலை தீரும்.
அஸ்தம்: அக்கம்பக்கத்தினருக்கு உதவி செய்வது நற்பெயர் பெறுவீர்கள். பணி காரணமாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
சித்திரை 1,2: கடன் பிரச்னை சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக சிறு உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.

குரு, புதன், சுக்கிரன் கூடுதல் நற்பலன் தருவர். விநாயகர் வழிபாடு சுபிட்சம் அளிக்கும்.
சித்திரை 3,4: பணியாளர்கள் கடுமையாக உழைப்பதன் மூலம் நன்மை காண்பர். மாணவர்களுக்கு இருந்த ஏமாற்றம் தீரும். வாரக்கடைசியில் குழந்தைகளுக்கு திடீர் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் நல்ல செய்தி உண்டு.
சுவாதி: குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் தொடர்பாக நன்மை காண்பீர்கள். பலகாலம் செய்த முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
விசாகம் 1,2,3: மற்றவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லி நிம்மதியளிப்பீர்கள். பயன்பாட்டுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.

சூரியன், செவ்வாய், புதன் நல்ல பலனைத் தருவர். அம்மன் வழிபாடு வளம் தரும்.
விசாகம் 4: மருத்துவச் செலவு வெகுவாக குறையும். புதிதாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகத்தால் உதவி காண்பீ்ர்கள்.
அனுஷம்: தாயாரின் உடல் நலக்குறைவு சரியாகும். இளைய சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம்.
கேட்டை: புகழ் அதிகரிக்கும். வேற்று மொழி பேசுபவர் நன்மை செய்வர். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.

குரு, ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். சாஸ்தா வழிபாடு நலம் தரும்.
மூலம்: அலுவலக நண்பர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் முயற்சிக்கும் உழைப்புக்கும் ஏற்ற பலன் மட்டுமே எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.
பூராடம்: சுயதொழில் தொடங்குவதற்கு இது ஏற்ற நேரம் அல்ல. மழலை பாக்கியத்திற்காக ஏங்குவோருக்கு நல்ல தகவல் உறுதியாகும். நண்பர்களால் உதவி உண்டு.
உத்திராடம் 1: வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்களோடு இணைந்து செய்யும் முயற்சி வெற்றி பெறும்.

புதன், கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். கிருஷ்ணர் வழிபாடு வளம் தரும்.
உத்திராடம் 2,3,4: மாணவர்கள் பொறுப்புடன் படிப்பர். கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை சரிவர பயன்படுத்துவது அவசியம். உடற்பயிற்சியில் ஆர்வம் அதிகரிக்கும்.
திருவோணம்: உங்கள் மகன் அல்லது மகளுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். புதிதாகத் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் 1,2: தேவையற்ற பயணங்கள் செல்ல வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாக இருப்பது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. அக்கம்பக்கத்தினருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

புதன், சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும் பெருமாள் வழிபாடு சுபிட்சம் தரும்.
அவிட்டம் 3,4: நீண்ட நாளாக எதிர்பார்த்த தொழில் ஒப்பந்தம் நிறைவேறும். ஆரோக்யத்தில் அக்கறை செலுத்துவீர்கள். அலைச்சல் கூடுதலாகும்.
சதயம்: பொறுப்புக்களை நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள். விண்ணப்பித்த வங்கிக் கடன் கிடைக்கும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: எதையும் பொறுமையாக கையாளுங்கள். உறவினர்களிடம் கவனமுடன் பேசுவது நல்லது. பயணத்தின் போது பொருட்களை பத்திரமாக பாதுகாப்பது அவசியம்.

குரு, புதன், சனி அதிர்ஷ்ட பலன் வழங்குவர். வராஹி வழிபாடு கஷ்டம் போக்கும்.
பூரட்டாதி 4: சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
உத்திரட்டாதி: தொழிலில் விடாமுயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமை சேர்க்கும். மனைவி வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.
ரேவதி: ஜாலியான மனநிலையுடன் இருப்பீர்கள். மற்றவர்களை புண்படுத்தியோ எடுத்தெறிந்தோ பேசாமல் இருப்பது நல்லது. பணியிடத்தில் கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 8.10.2021 காலை 6:00 மணி – 9.10.2021 மாலை 3:34 மணி.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இன்றைய ராசிபலன் (17 மே 2021)

divya divya

இன்றைய நாள் எப்படி?

Pagetamil

இன்றைய நாள் எப்படி?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!