31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

உலகின் மிகப்பெரிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எவர் ஏஸ் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992 கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் திறன்கொண்டது.

எவர் கிரீன் கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், 2021ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த ஜூலை மாதம் கொள்கலன் சேவையில் இணைக்கப்பட்டது. பனாமா கொடியின் கீழ் பயணிக்கிறது.

நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து, கடந்த மாதம் புறப்பட்ட குறித்த கப்பல், இன்று (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இது போன்ற பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக்கூடிய 24 துறைமுகங்கள் உலகில் உள்ளதுடன், தெற்காசியாவில் அந்தக் கப்பல் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment