29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மன்னார் பிரதேச செயலாளரின் தலையீட்டினால் மழை நீர் வெளியேற்றுவதற்கான ஏற்பாடு

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக  சீரற்ற காலநிலை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தமையினால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை  (4) மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும்  உறிய   அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
-உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கையை மேற்கொள்ளாத நிலையில் உடனடியாக மன்னார் பிரதேசச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில்   மன்னார்   பிரதேச செயலாளர் ம.பிரதீப் துரித நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார்.
-மன்னார் பிரதேசச் செயலாளரின் துரித நடவடிக்கையால்   வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மன்னார் நகர சபையினர் குறித்த வெள்ளப்பாதிப்பு காணப்படும் பகுதிகளில் நேரடி சென்று பார்வையிட்டதோடு,  குறித்த பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீர் தற்காலிகமாக வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் செயற்பாட்டில் தற்காலிக வடிகால் அமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது டன் நேரடியாக மழை நீரை  கடலுடன் கலப்பதற்கு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment