இஸ்ரேலில் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களிற்கு அந்நாட்டு அரசாங்கம் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் பல இடங்களிற்கு செல்ல முடியாது. அதனால் விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறும் குடிமக்களை அது கேட்டுக்கொண்டது.
இனி பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் தான் உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற பொது இடங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இஸ்ரேல் ஜூலை மாதம் முதலே பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை தொடங்கிவிட்டது.
12 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போட அது அனுமதி வழங்கியது.
பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்கள் தான் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு green pass என்னும் அட்டை வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் கூறியது.
green pass அட்டையை வைத்துத் தான் பொது இடங்களுக்குள் நுழைய முடியும்.
9.4 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இஸ்ரேலில் சுமார் 37 விழுக்காட்டினர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி வழங்கலில் இஸ்ரேல் உலகில் முதல்நிலை நாடுகளில் ஒன்றாகும்.