Pagetamil
இலங்கை

மன்னார் பிரதேசசபை தவிசாளர் தெரிவில் பாதுகாப்பு கெடுபிடி!

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்றைய தினம் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இடம் பெற்ற நிலையில்,குறித்த தவிசாளர் தெரிவில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் புதிய தவிசாளர் தெரிவில் கலந்து கொள்வதற்காக வந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும்,காதர் மஸ்தான் ஆகியோரையும் கலந்து கொள்ள பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

மன்னார் பிரதேச சபையை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டதோடு,பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் கலந்து கொள்ளச் சென்ற மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பிரதேச சபையின் பணியாளர்களும் சோதனையின் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வடமாகாண ஆளுநரால் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (29) உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவு இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

east tamil

மண்ணெண்ணெய் புதிய விலை அறிவிப்பு

east tamil

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக மண் தினம்: விவசாயிகளின் எதிர்காலம் குறித்து ஆளுநரின் பேச்சு

east tamil

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் கைது

east tamil

Leave a Comment