26.6 C
Jaffna
December 6, 2021
முக்கியச் செய்திகள்

எம்.ஏ.சுமந்திரனின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஆராய தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்பீடம் கூடுகிறது!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (29) மாலை இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உத்தியோகபூர்வ பேச்சாளர் யாரும் இல்லாத நிலையில், உத்தியோகபூர்வ பேச்சாளர் என்ற கோதாவில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் கூட்டமைப்பிற்குள்ளும், வெளியிலும் சர்ச்சைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

கூட்டமைப்பின் வசமுள்ள உள்ளூராட்சிசசபைகளை அரச சார்பு அணிகள் கைப்பற்ற இரகசிய சதிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இறுதியாக வல்வெட்டி நகரசபையையும் ஆளும் பெரமுன கூட்டின் அங்கத்துவ கூட்டு கைப்பற்ற உதவியிருந்தார்.

சுமந்திரனின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால்- அவருக்கு கடிவாளமிடாவிட்டால் தமிழ் மக்களின் நிலை, கழுதை தேய்ந்து கட்டெறும்பானதை போல மாறிவிடும் என்பதால், கூட்டமைப்பின் தலைமை அவசரமாக இன்று மாலை கூடுகிறது.

அனேகமாக, இன்றைய கூட்டம் எம்.ஏ.சுமந்திரனின் நடவடிக்கைகளால் ஏற்படும் குழப்பங்களை ஆராய்வதையே பிரதான நோக்கமாக கொண்டிருக்குமென தெரிகிறது. இதனால், இன்றைய கூட்டத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் அழைக்கப்படவில்லை. அவரை தவிர்த்து விட்டே கூட்டத்தை கூட்டி, ஆராயப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Related posts

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின!

Pagetamil

யுத்தத்தின் பின் வடக்கு, கிழக்கை அடிமை நாடாக அரசு நடத்துகிறது: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

UPDATE: 17 தமிழ் அரசியல் கைதிகளிற்கு பொதுமன்னிப்பு: கோட்டா வழங்கினார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!