27.6 C
Jaffna
March 28, 2024
உலகம்

தலிபான் கெடுபிடிகளை எதிர்க்கும் ஆப்கன் பெண் தொழிலதிபர்

நாங்கள் மவுனமாக இருக்க முடியாது என தலிபான் கெடுபிடிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆப்கன் பெண் தொழிலதிபர்.

ஆபானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பின்னர் அவர்கள் பெண்களுக்கு தெளிவான ஒரு தகவலைச் சொல்லிவிட்டனர். எங்கெல்லாம் பெண்கள் இல்லாமல் ஒரு வேலையைச் செய்ய முடியாது என்ற சூழல் இருக்கிறதோ அந்த இடங்களில் மட்டுமே பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள் மற்ற பணிகளில் இருந்து விலகியிருக்கலாம் என்று கூறியிருக்கின்றனர். பெண்களுக்கு அரசியலில் இடமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். சமூகப் பொறுப்பை பெண்கள் மீது சுமையாக ஏற்ற இஸ்லாம் அனுமதிக்கவில்லை அதனால் பெண்கள் வேலை செய்ய நாங்கள் ஊக்குவிக்கவில்லை என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானஸ்தானைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தலிபான்களின் கெடுபிடிகளுக்கு பணிய முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் குங்குமப்பூ சாகுபடி பிரதானமாக இருக்கிறது. குங்குமப்பூ ஏற்றுமதி தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளார் ஷஃபாகி அட்டாய். இவர் பாஷ்தோன் ஜேர்கோன் சாஃப்ரான் வுமன்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனம் குங்குமப்பூவை சாகுபடி செய்து, அதனைப் பதப்படுத்தி, அதனை ஏற்றுமதி செய்கின்றது.

இதில் பேக்கிங்கும் அடங்கும்.இந்த நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கே வேலை பார்க்கும் பெண்கள் பலரும் அவர்களின் குடும்பத்தின் வருமானம் ஈட்டும் முக்கிய நபர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் தலிபான் ஆட்சி அமைந்துள்ளதால் குங்குமப்பூ தொழில் முடங்கியுள்ளது. இது குறித்து அட்டாய் கூறுகையில், இந்தத் தொழிலை நிறுவி இவ்வளவு தூரம் வளர்த்தெடுக்க நான் மிகவும் கடுமையான பாதைகளைக் கடந்துள்ளேன். தலிபான்கள் என்னதான் கெடுபிடி விதித்தாலும் எதிர்கொள்வோம் என்றார்.

ஓப்பியத்துக்கு மாற்று:

ஆப்கானிஸ்தானில் ஓப்பியம் எனப்படும் கஞ்சா பயிர் சாகுபடி அதிகம். உலகம் முழுவதும் புழக்கத்திற்கு வரும் போதைப்பொருளில் 80 முதல் 90 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்து உருவாக்கப்படுகிறது. இந்த நிலையில் 2001க்குப் பின்னால் ஆப்கனில் மேற்கத்திய ஆதிக்கம் வந்தது. அப்போது மேற்கத்திய நாடுகள் ஓப்பியம் உற்பத்திக்குப் பதிலாக குங்குமப்பூ சாகுபடியை ஊக்குவித்தனர். ஆனால், அண்மைக்காலமாகவே ஆப்கானிஸ்தானில் மீண்டும் பாப்பி விதைகள் உற்பத்தி அதிகரித்துள்ளது.

குங்குமப்பூ தான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வாசனைப் பொருள் ஆகும். ஒரு கிலோ குங்குமப்பூ 5000 டொலருக்கும் விற்பனையாகிறது. அட்டாயியின் நிறுவனம் ஆண்டுக்கு 200 முதல் 500 கிலோ குங்குமப்பூவை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தியது. ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பறிக்கப்படும் குங்குமப்பூ பின்னர் உலர்த்தப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன. 20 ஆண்டுகால உழைப்பு அத்தனையும் தலிபான்களால் வீணாகிவிடுவோமோ என்று அஞ்சுவதாகக் கூறுகிறார் அட்டாய். இது விவசாயம் சார்ந்த தொழில். அதனால், இதில் தலிபான்கள் தலையிடமாட்டார்கள் என நினைக்கிறோம். ஒருவேளை அச்சுறுத்தினாலும் அடிபணியாமல் எதிர்த்து நிற்போம் என்று கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment