27.8 C
Jaffna
October 1, 2022
இலங்கை

விவசாய காணி உரிமையில் விடாப்பிடியாக நிற்கும் மடு தேவாலயம்; கோவில் மோட்டை விவசாயிகள்- பங்குத்தந்தை வாய்த்தர்க்கம்: தொடரும் பரபரப்பு!

மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் அமைந்துள்ள கோவில் மோட்டை விவசாயிகளுக்கும் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு தந்தைக்கும் இடையில் நேற்று (24) காலை வயல் காணியில் வைத்து வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த வயல் காணியில் 40 வருடங்களுக்கு மேலாக பிரதேச மக்கள் விவசாயம் செய்து வருகின்ற போதும், அவற்றின் விவசாய உரித்திற்காக மடு ஆலய நிர்வாகம் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்துள்ளது.

இதன் விளைவாக விவசாயிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

அண்மையில், மாகாண காணி ஆணையாளர் மற்றும் வட மாகாண ஆளுநரின் அனுமதியின் பெயரில் விவசாயிகள் குறித்த வயல் காணியை உழவு செய்து பயிர் செய்ய தயாராகி வருகின்ற நிலையில் அத்துமீறி பிரவேசித்த பங்குத்தந்தையும் மடு தேவலயத்தில் வேலை செய்கின்ற சிலரும் இரண்டு உழவு இயந்திரங்களால் அத்துமீறி விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்டனர் .

இதன்போது, பங்குத் தந்தைக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

விவசாயிகளின் கடும் எதிர்ப்பையடுத்து பங்கு தந்தை வயல் காணியை விட்டு வெளியேறி சென்றிருந்தார்.

இதே போன்ற ஒரு நிகழ்வு சிறுபோக நெற்செய்கை போது போதும் இடம்பெற்றதாக பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Related posts

ஜனவரி மாதத்தின் முன் மேலுமொரு தொகுதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர்: சுரேன் ராகவன் எம்.பி!

Pagetamil

மஹிந்தவின் பாதுகாப்பு பிரதானி விசாரணைக்கு அழைப்பு!

Pagetamil

யாழ் சிறையில் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!