உலகம் முக்கியச் செய்திகள்

மனித உரிமைகளில் உலகின் இரட்டைப் போக்கு; அமெரிக்காவின் நன்றியற்ற தன்மை: ஐநாவில் சாடிய பாகிஸ்தான்!

அமெரிக்காவின் நன்றியற்ற தன்மைக்கும், சர்வதேச இரட்டை நிலைப்பாட்டுக்கும் பாகிஸ்தான் பலியாகிவிட்டது என்று ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேரடியாகக் கலந்து கொள்ளவி்ல்லை அவரின் பதிவுசெய்யப்பட்ட பேச்சு மட்டும் ஒலிபரப்பப்பட்டது. பருவநிலை மாறுபாடு, சர்வதேசஅளவில் இஸ்லாம் குறித்த அச்சம், உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.

அதுமட்டுமல்லாமல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை இந்து தேசிய அரசு என்றும், பாசிஸ அரசு என்றும் இம்ரான் கான் கடுமையாக சொற்களால் குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தானையும் அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டு கைகழுவிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.

இம்ரான் கான் ஐ.நாவில் பேசியதாவது:

ஆப்கானிஸ்தானில் உள்ள தற்போதைய சூழலுக்கு, சில காரணங்களால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் பாகிஸ்தான் மீது பழிசுமத்துகிறார்கள்.

இந்த ஐ.நா பொதுமன்றத்திலிருந்து அனைவரும் தெரி்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன், ஆப்கானிஸ்தானைத் தவிர்த்து அதிகமாக பாதி்க்கப்பட்டது பாகிஸ்தான்தான். இரட்டை கோபுரம் தகர்ப்புக்குப்பின், அமெரிக்கா தொடர்ந்த போரில் பாகிஸ்தானும் சேர்ந்தபோதே அந்த பாதிப்பு தொடங்கிவிட்டது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக முஜாகிதீன்களுக்கு பயிற்சி அளித்ததும் அமெரிக்காதான். அவர்களை ஹூரோவாகக்கியதும் அமெரி்க்காதான்.

தலிபான்களுக்கு எதிரான போரில் அமெரி்க்காவுடன் நாங்கள் சேர்ததற்கு நாங்கள் கொடுத்த விலை 80 ஆயிரம் பாகிஸ்தான் மக்களின் உயிர். உள்நாட்டுக் குழப்பம், எதிர்ப்பு, ஆளில்லா விமானத் தாக்குதல்தான்.

இந்தப் போரின் இறுதியில் அமெரிக்காவுக்கு உதவிய எங்களுக்கு எந்தவிதமான ஊக்கப்படுத்தும் வார்த்தையும் கிடைக்கவில்லை, மாறாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டுதான் இருந்தது.

அமெரிக்காவின் நன்றியற்ற தன்மைக்கும், சர்வதேச இரட்டை நிலைப்பாட்டுக்கும் பாகிஸ்தான் பலியாகி விட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் வலுப்பெற்றதற்கு பாகிஸ்தான்தான் காரணம், அவர்களுடன் பாகிஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்தது என்று குற்றம்சாட்டினார்கள்.

தலிபான்கள் ஆட்சியை சர்வதேச சமூகம் ஒதுக்கி வைப்பதற்கு பதிலாக மக்களைப் பாதுகாக்க வலிமைப்படுத்த வேண்டும் என்ற எங்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி வார்த்தைகளை இங்கு கூறுகிறேன். தலிபான்கள் ஆட்சியில் நிச்சயம் மனித உரிமைகள் காக்கப்படும், முழுமையான அரசு ஏற்பட்டு, தீவிரவாதிகள் ஆப்கன் மண்ணை பயன்படுத்தமுடியாத வகையில் தடுக்கப்படும்.

சமமான தன்மை இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மனித உரிமை மீறல்களை உலகம் அணுகுவது துரதிருஷ்டவசமானது, மிகவும் துரதிருஷ்டவசமானது.

புவிசார் அரசியல் பரிசீலனைகள், அல்லது பெருநிறுவன நலன்கள், வணிக நலன்களால் வளர்ந்த நாடுகளை தங்கள் தொடர்புடைய நாடுகளின் மீறல்களைக் கவனிக்கவே அடிக்கடி கட்டாயப்படுத்துகின்றன. சக்திமிக்க நாடுகளின் கூட்டாளிகளின் மனித உரிமை மீறல்களை அவர்கள் கவனிப்பதில்லை.

இந்தியாவில் உள்ள இந்துத்துவா சிந்தனை கொண்ட அரசு பாசிஸ சிந்தனையுடன், 20 கோடி முஸ்லிம் மக்கள் சமூகத்துக்கு எதிராக வன்முறையையும், அச்சத்தையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. குறிப்பாக சட்டத்திற்கு முரணாக கைது, தடுத்து வைப்பு, கடத்தல், தாக்குதல், கொலைகள், பாகுபாடு கொண்ட குடியுரிமைச் சட்டங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு எட்ட இந்திய அரசு அழைக்கி்றது. ஆனால், காஷ்மீரில் இந்தியப் படைகள் ஒட்டுமொத்தமாக, திட்டமிட்டு மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள்.

காஷ்மீரின் சிறந்த தலைவர் சையது அலி கிலானி உயிரிழந்த பின் அவரின் சடலத்தை வலுக்கட்டாயமாக இந்தியப் படைகள் பிடுங்கிச் சென்று, அடக்கம் செய்தனர். இஸ்லாமிய முறைப்படி முழுமையாக அடக்கம் செய்யவி்ல்லை என கிலானி குடும்பத்தார் குற்றம்சாட்டுகிறார்கள். கிலானி உடலை இஸ்லாமிய முறைப்படி முழு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

 “ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.”- காலித் ஹூசைனி

Pagetamil

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல்: 2 இந்தியர்கள் உள்ளிட்ட 3 பேர் பலி!

Pagetamil

விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி, பல்லை உடைத்த பயணி: வைரல் வீடியோ!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!