27.7 C
Jaffna
October 25, 2021
கிழக்கு

‘காசு தராவிட்டால் கண்ணை தோண்டியெடுப்பேன்’: போதைக்கு அடிமையான 19 வயது மகன் கொடூரம்; பார்வையை இழந்த தந்தை!

பிறருக்கு புத்தி சொல்ல போய், இறுதியில் மூக்குடைபட்ட பலரை பார்த்துள்ளோம். இங்கே ஒருவர் தனது கண்ணையே இழந்துள்ளார். இதில் துயரமென்னவென்றால், அவர் தனது மகனிற்கே புத்தி செல்ல சென்று கண்ணை இழந்துள்ளார்!

போதைப்பொருள்‌ பாவனைக்கு அடிமையான எனது மகனை திருத்தி, சமூகத்தில் நல்ல பிரஜையாக்க முயன்ற பொறுப்பான தந்தையொருவரே, இவ்வாறு தனது கண்ணை இழந்துள்ளார்.

போதைப்பாவனையால் குடும்பங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதற்கு நல்ல உதாரணமாக அமைந்த இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியில் கடந்த18ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 67 வயதான சத்ஹத்துல்லா ஹசனார் என்ற முதியவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

“எனது மகனின் போதைப்பொருள் பாவனையை நிறுத்த தொடர்ந்தும் முயற்சித்து வந்தேன். 4 வருடங்களாக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். போதைப்பொருள்‌ பாவிக்க வேண்டாம்‌. கெட்ட நண்பர்களுடன்‌ சேர வேண்டாம்‌ என்று புத்‌திமதி சொன்னதாலேயே எனது கண்ணை தோண்டினான்“ என கண்ணீருடன் கூறுகிறார்.

“எனது மகனுக்கு தற்போது 19 வயது, அவன்‌ 2017ஆம்‌ ஆண்டில்‌ இருந்தே போதைக்கு அடிமையாகி விட்டான். அவனை திருத்த பல முயற்சிகள் எடுத்து வருகிறேன்.

எனது மகன் போதைப்பொருள் பாவிப்பதால், நான் பள்ளிவாசலில் செய்ய வேலையையும் விட்டு விட்டேன்.

எனது மகன் போதைப்பொருள் பாவிப்பது ஊருக்குள் எல்லோரும்‌ தெரிய தொடங்கி, என்னிடம் வந்து சொல்வார்கள். அதைக்‌ கேட்கும்போது எனக்கு பெரிய கவலையாக இருக்கும். எனக்கும்‌ வெட்கம்‌, மானம்‌ இருக்கிறது. அதலால்தான்‌ என்னால் தொடர்ந்தும்‌
பள்ளிவாசலில்‌ கடமை செய்ய முடியாமல்‌ போனது.

எனது மகனைத்‌ திருத்த வேண்டும் என்பதற்காக, 2017ஆம்‌ ஆண்டு முதல்‌ இதுவரை ஐந்து தடவைகள்‌ வாழைச்சேனை பொலிஸ்‌ நிலையத்தில்‌ முறைப்பாடு செய்துள்ளேன்‌. ஆனால் அது பலனளிக்கவில்லை. தயவுசெய்து எனது மகனை விட்டுவிடுங்கள்‌ என்று அவனது.
நண்பர்களிடமும்‌ அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால், அதில் யாரும் திருந்தவில்லை. எனது மகனை விட்டு அவர்கள்‌ விலகவுமில்லை.

சம்பவம்‌ நடந்த அன்று, மகன்‌ என்னிடம்‌ வந்து ஆயிரம்‌ ரூபாய்‌ பணம்‌ கேட்டான். நான்‌ கொடுக்கவில்லை.

பணம்‌.தராவிட்டால்‌ கொலை செல்வேன்‌ என்று சொல்லிக்‌ கொண்டே, எனது தலையில்‌ கல்லால்‌ கடுமையாக தாக்கினான்‌. பின்னர்‌ எனது கழுத்தை நெரித்து, கொலை.
செய்ய முயற்சித்தான்‌.

கடுமையாக போராடித்தான் அவனது பிடியிலிருந்து விடுபட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன்.

ஆனால்‌, எனது கண்ணைஅவன் தோண்டி எடுத்துவிட்டான்‌. தனது கைகளால்தான் இதை செய்தான். இப்போது எனது. இடது கண்‌ முழுமையாக எடுக்கப்பட்டு விட்டது. வலது கண்ணும்‌ 80 சதவீதம்‌ பாதிப்படைத்துள்ளதாக வைத்தியர்கள்‌ சொல்லியுள்ளனர்.

ஆனால்‌, நான்‌ கவலைப்படவில்லை. தைரியமாக இருக்கிறேன்‌. எனது மகனை
நான்‌ ஜெயிலுக்கு அனுப்பவில்லை. அவர்‌ செய்த வேலையால்தான்‌ அவர்‌ இப்போது,
சிறையில்‌ இருக்கிறார்‌. எனக்கு நடந்த இந்தச்‌ சம்பவம்‌ போல, இனி யாருக்கும்‌ நடக்கக்‌ கூடாது. பிள்ளைகள்‌ எங்கு செல்கிறார்கள்‌, யாருடன்‌. பழகுகிறார்கள்‌ என்பதை பெற்றோர்கள்‌ அறிந்திருக்க வேண்டும்‌. ஒவ்வொரு, பெற்றோர்களும்‌ பிள்ளைகள்‌ விடயத்தில்‌ விழிப்புடன்‌ இருக்க வேண்டும்‌. இப்போது, போதைப்பொருள்‌ பாவனையும்‌
விற்பனையும்‌ அதிகரித்து விட்டது. இதனால் இளம்பிள்ளைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல குடும்பங்களில் நிம்மதியில்லாமல் போய் விட்டது. எனக்கும், எனது குடும்பத்திற்கும் நடந்தது, இனி யாருக்கும் நடகக்கூடாது. போதைப்பொருளை ஒழிக்க அனைவரும்‌ ஒன்றாக செயற்பட வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

நினைவுச்சின்னம் உடைக்கப்பட்டது தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுவதன் இன்னொரு சாட்சி: பா.அரியநேத்திரன்!

Pagetamil

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Pagetamil

பி2பி போராட்டத்தை பெரு வெற்றியடைய வைத்த இலங்கை பொலிசாருக்கு மனமார்ந்த நன்றிகள்: கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!