28.3 C
Jaffna
January 16, 2022
இலங்கை

அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறையை கஜேந்திரனின் கைது வெளிப்படுத்தியுள்ளது: முன்னாள் எம்.பி அரியம்!

உயிர்நீத்தவர்களை நினைவு கூர முடியாமல் தடுப்பவர்களால் எப்படி உள்நாட்டு பொறிமுறை மூலம் தீர்வு வழங்க முடியும், செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்த விதமே உள்நாட்டு பொறிமுறை!எனகூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன்.

யாழ் மாவட்டத்தில் இருந்து தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன் அவர்களை தியாகி திலீபனின் நினைவு அனுஷ்டிக்கும்போது கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் கூறுகையில்.

உண்ணாவிரதம் இருந்து அகிம்சை போராட்டத்தில் தமது உயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனை நினைவு கூரமுடியாத தடை களை வடக்கு கிழக்கில் உள்ள பொலிசார் நீதிமன்றத்தின் ஊடாக தடைகளை விதித்துள்ளனர்.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு எந்த வித தனைக உத்தரவும் இன்றி அவர் அஞ்சலி வணக்கம் செலுத்தும்போது ஒரு நாயை பிடித்து இழுத்துச்செல்வதை போன்று ஒரு கௌரவ பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்த விதம் தமிழ்மக்களின் மனதை புண்படுத்தியசெயலாகும்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது, அவரது சிறப்புரிமைகளை மீறும் வகையில், இந்த ஜனநாயக நாட்டில் இத்தனை மோசமான அரசவன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளமையானது, இங்குள்ள சாதாரண தமிழர்களின் இயல்புவாழ்வுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை தெட்டத்தெளிவாக எண்பித்துள்ளது.

கோபிட் 19, நிலமைகளால் மக்கள் ஒன்று கூடி இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதால் நொய் பரவும் ஆபத்து உண்டு என கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 23/09/2021, அன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஷபக்ச கலந்து கொண்ட நிகழ்வுகளில் எல்லாம் மக்கள் கூட்டமாக நெருங்கி நின்றனர் அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் எந்த வித சமூக இடைவெளிகளும் இன்றி குழுமி நின்றதை அவதானிக்க முடுந்தது.

ஆளும் கட்சி அரசியல் வாதிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு கொரோணா வைரஷ் தாக்கம் ஏற்படாதா?
தமிழ்தேசிய அரசியல் வாதிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில்தானா இலங்கையில் கொரோணா வைரஷ் ஊடுருவும்.

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் அமைதியான முறையில் அஞ்சலி செய்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்களை, ஒரு குற்றவாளியைப்போல் வலுக்கட்டாயமாக பொலிசார் கைதுசெய்தமை கண்டனத்திற்கு உரிய விடயமாகும்.

ஜனாதிபதி அவர்கள் அமரிக்காவில் சென்று வடகிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக உள்நாட்டு பொறிமுறை மூலம் தீர்வு வழங்குவது சம்மந்தமான கருத்தை தெரிவிக்கின்றார். அவர் வெளிநாட்டில் அந்த கருத்தை தெரிவித்து 48, மணித்தியாலங்கள் முடிவுறாத நிலையில் உள்நாட்டில் உயிர்நீத்தவரை நினைவு கூரமுடியாமல் அடக்கு முறையால் பொலிசார் கைது செய்கின்றனர் இதுதானா உள்நாட்டு பொறிமுறை எனவும் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை ஆராய இந்திய நிபுணர்கள்!

Pagetamil

மன்னார் ஊடகவியலாளர் அந்தோனி மார்க் கொரோனா தொற்றால் மரணம்!

Pagetamil

ஏன்..எங்கே இந்த விருந்து நடந்தது? ஐ.தே.க விளக்கம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!