அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வலிமை படத்தின் glimpse வெளியாகியிருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்திருக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங் அண்மையில் தான் முடிந்தது. இதையடுத்து வலிமை படம் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று ட்விட்டரில் அறிவித்தார்.
வலிமை படத்தின் Glimpse செப்டம்பர் 23ம் திகதி மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. மாலை 6 மணியில் இருந்தே அனைவரும் ட்விட்டரில் டைம்லைனை ரிஃப்ரெஷ் பண்ணத் துவங்கிவிட்டனர். ஆனால் அறிவித்த நேரத்தில் Glimpse வரவில்லை.
அதன் பிறகு அரை மணிநேரம் கழித்து ValimaiGlimpse வெளியானது.
தமிழ் படத்திற்கு Glimpse வெளியிடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
முன்னதாக வலிமை படம் தீபாவளிக்கு தான் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்தின் தீபாவளி ரிலீஸை ஏற்கனவே அவர்கள் உறுதி செய்துவிட்டார்கள். அதனால் மோதலை தவிர்க்க பொங்கலுக்கு வலிமயையை ரிலீஸ் செய்கிறார்களாம்.