29.8 C
Jaffna
March 29, 2024
உலகம்

கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக கட்டுமான ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கட்­டாயத் தடுப்­பூ­சிக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டம் வன்­மு­றை­யாக வெடித்­த­தைத் தொடர்ந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் நக­ரம் முழு­வ­தும் அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்குக்       கட்­டு­மானத் தளங்­களில் வேலை­களை நிறுத்த அதி­கா­ரி­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­னர்.

கட்­டு­மா­னத் துறை ஊழி­யர்­கள் எதிர்வரும் வெள்­ளிக்­கி­ழ­மைக்­குள் குறைந்­தது ஒரு                தடுப்­பூசியாவது போட்­டுக்கொண்டாக வேண்­டும் என்று விக்­டோ­ரியா மாநில அர­சாங்­கம் முன்பே கூறி­யி­ருந்­தது.

இதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வித­மாக, திங்­கட்­கி­ழ­மை­யன்று நடந்த ஆர்ப்­பாட்­டத்­தின் போது வன்­முறை வெடித்­தது.

இதை­ய­டுத்து நக­ரம் முழு­வ­தும் கல­கத் தடுப்பு போலிஸ்­கா­ரர்­கள் களமிறக்கப்பட்டனர்.  கூட்­டத்­தைக் கலைக்க பொலி­சார் ரப்பர் குண்­டு­க­ளை­யும் மிளகுத் தெளிப்­பா­னை­யும் பயன்­ப­டுத்­தி­னர்.

கட்­டு­மான ஊழி­யர்­களும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களும் நேற்­றும் ஆர்ப்­பாட்­டத்­தில்                   ஈடு­பட்­ட­னர். தீப்­பந்­தங்­க­ளோடு முழக்­க­மிட்­ட­வாறு சென்ற அவர்­க­ளைக் கலகத் தடுப்பு போலி­சார் பின்­தொ­டர்ந்து செல்­வ­தைக் சமூக ஊட­க  காணொ­ளி­கள் காட்­டு­கின்­றன.

வன்­மு­றை­யில் ஈடு­பட்ட பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக விக்­டோ­ரியா மாநில போலிஸ் துறை தெரி­வித்­துள்­ளது.

கட்­டு­மா­னத் தளங்­களை இப்­படி வலுகட்­டா­ய­மாக மூடு­வது அவுஸ்­தி­ரே­லி­யா­வின்       பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை மோச­மாக்­கும் என்­றும் நீட்­டிக்­கப்­படும் முடக்­க­நிலை உத்­த­ர­வு­கள் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை இரண்­டா­வது மந்­த­நி­லைக்­குத் தள்­ளக்­கூ­டும் என்­றும் பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் கரு­து­கின்­ற­னர்.

விக்­டோ­ரி­யா­வில் நேற்று 603 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர். இவ்­வாண்­டில் பதி­வான ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும் இது.

பல வாரங்­க­ளாக முடக்­க­நி­லை­யில் இருக்­கும் சிட்­னியை தலை­ந­க­ர­மா­கக் கொண்ட நியூ செளத் வேல்­ஸில் 1,022 பேர் தொற்­றுக்கு ஆளா­கி­னர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment