குற்றம்

இணையவழி கல்வியில் மாறிய பாதை: 15 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த 18 வயது மாணவி!

இணைய வழி கற்கையில் ஈடுபட்ட மாணவியொருவர், ஆபாச வலைத்தளங்களிற்கு அடிமையாகி, அயல்வீட்டிலுள்ள 15 வயதான மாணவனுடன் பாலுறவில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.

மாணவி தற்போது கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

அங்குள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் 18 வயதான மாணவியொருவரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்.

இணைய வழி கற்கையில் ஈடுபட்ட மாணவி, வயது வந்தோர் தளங்களிலுள்ள வீடியோக்களை பார்த்து, உடலுறவில் வெறி கொண்டார்.

முடக்கம் முடிந்து பாடசாலை மீள ஆரம்பிக்கும் போது, ஆண் நண்பரொருவரை உருவாக்கி, அவருடன் பாலுறவில் ஈடுபடும் எதிர்பார்ப்பில் இருந்துள்ளார். ஆனால், பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது, பிள்ளையார் கல்யாணம் மாதிரி இழுபட்டு செல்வதால்,  அவர் மனது கட்டுக்கடங்காமல் கொந்தளித்து்க் கொண்டிருந்தது.

அவர்களது வீட்டின் அருகிலே15 வயதானசிறுவன் ஒருவர் வசித்து வந்தார்.

இரண்டு குடும்பங்களும் நெருக்கமானவை. நெருங்கிய உறவினர்கள் போல பழகி வந்தனர்.

அந்த வீட்டுக்கு சென்ற மாணவி, 15 வயது சிறுவன் தனது வீட்டிற்கு கல்விகற்க வரலாமென கூறியுள்ளார்.

அன்று இரவு மாணவியின் வீட்டிற்கு, சிறுவன் சென்றுள்ளார்.

இருவரும் உடன்பிறப்புக்கள் போல பழகுவதால், பெற்றோர் அவர்களை நுணுக்கமாக கவனிக்கவில்லை. இரவு  வரை கல்வி கற்ற பின்னர், அன்றிரவு தனது அறையிலேயே மாணவனை தங்க வைத்துள்ளார் மாணவி.

வீட்டில் எல்லோரும் உறங்கிய பின்னர், மாணவி திரையில் பார்த்த  காணொளிகளில் இடம்பெற்ற காட்சிகளை போல செயற்பட்டுள்ளார்.

மாணவன் அதற்கு இடமளிக்காத போதும், மாணவி வலுக்கட்டாயமாக அவரை இதில் ஈடுபடுத்தினார்.

அடுத்த நாள் விடிந்ததும், சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்த அனைத்தையும் தனது தாயிடம் கூறினார். தாயார், திக்வெல்ல போலீசில் சென்று புகார் அளித்தார்.

புகாரின் படி, போலீசார் சந்தேக நபரை கைது செய்து சட்டத்தை அமல்படுத்தினர்.

இணையவழி கற்கையில் ஈடுபடும் மாணவர்களின் நலனில் பெற்றோர் அக்கறை காண்பிக்க வேண்டியதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
1
+1
1
+1
1

Related posts

யாழ் நகரில் கப்பம் பெற்ற இருவர் மடக்கிப் பிடிப்பு: அதிர்ச்சிக் காட்சிகள் (CCTV)

Pagetamil

குளிர்பானத்துக்கு ஆசைப்பட்டு முகத்தை காட்டிய திருடன் சிக்கினார்!

Pagetamil

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!