25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இந்தியா

19 ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள 3 தொன் ஆப்கானிஸ்தான் ஹெரோயின் போதைப்பொருள் இந்தியாவில் சிக்கியது!

ஆப்கானிஸ்தானிலிருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட 3 தொன் எடை கொண்ட ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெரோயின் குஜராத்தில் சிக்கியுள்ளது.

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பிடிபட்ட போதைப் பொருட்களில் அதிக மதிப்பு வாய்ந்தவை தற்போது பிடிபட்ட ஹெரோயின் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இருவரை வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து வருவாய் புலனாய்வுத் துறையினர் வட்டாரங்கள் கூறுகையில், “முந்த்ரா துறைமுகத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 தொன் ஹெரோயின் போதைப் பொருட்கள் இருப்பதாக இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டனர். இரு கன்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒரு கன்டெய்னரில் 2 தொன் ஹெரோயின் போதைப் பொருளும், மற்றொரு கன்டெய்னரில் ஆயிரம் கிலோவும் இருந்தது. இந்த இரு கன்டெய்னர்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்றப்பட்டுள்ளன.

இந்தப் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக அகமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த இரு கன்டெய்னர்களிலும் உள்ள ஹெரோயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.19,900 கோடி இருக்கும். இந்தக் கடத்தலில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுவரை ஆப்கனைச் சேர்ந்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தனர்.

உலக அளவில் ஹெரோயின் அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு ஆப்கானிஸ்தான். உலக அளவில் 80 முதல் 90 சதவீத உற்பத்தி இங்கிருந்து நடக்கிறது. ஆப்கானிஸ்தான் சமீபத்தில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தபின், ஹெரோயின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

அசைவ உணவை கைவிடும்படி சைக்கோ தனமாக பலவந்தப்படுத்திய காதலன்: 25 வயதான விமானி விபரீத முடிவு!

Pagetamil

Leave a Comment