ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்திர ஆராய்ச்சி, பாதுக்க பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பதவியிலிருந்த விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
அந்த பகுதியில் ஆளுந்தரப்பிற்குள் ஏற்பட்ட குத்துவெட்டையடுத்தே அவர் பதவி விலகுகிறார்.
அமைச்சர்கள் காமினி லொக்குகே, சரத் வீரசேகர ஆகியோரின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்து பதவிவிலகுவதாக தெரிவித்துள்ளார்.
அந்த பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றம் அரசியல் நோக்கமுடையது என்றும், அதை செய்ய வேண்டாமென்று சரத் வீரசேகரவிடம் கூறிய போதும், அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு சாதகமான அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அது தனக்கு ஆபத்த என்றும் தெரிவித்துள்ளார்.
10 நாட்களில் விவகாரம் தீர்க்கப்படா விட்டால் தான் பதவிவிலகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1