29.3 C
Jaffna
March 29, 2024
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

ஜெனீவா கடித விவகாரம்: சத்தியலிங்கத்தின் விளக்கம் கோரும் கடிதத்திற்கு பதிலளிக்க தேவையில்லை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரால அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் கடிதத்திற்கு பதில் அனுப்ப தேவையில்லையென கட்சியின் உயர்மட்டத்தினால் அறிவிக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. அதில் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு தமிழ் அரசு கட்சியின் பல உறுப்பினர்கள் உடன்படவில்லை. “கே.பி, பிள்ளையான், கருணா ஆகியோரை விசாரிக்கவே அப்படியொரு வசனம் சேர்த்தோம். அந்த வசனத்தை எதிர்ப்பவர்கள், கே.பி, பிள்ளையான், கருணாவை விசாரிப்பதை விரும்பாதவர்கள்“ என வழக்கம் போல ஒரு “உருட்டு பிரட்டு“ விளக்கத்தை தமிழ் அரசு கட்சி பிரமுகர்கள் சிலர் வழங்க முற்பட்டனர்.

எனினும், தமிழ் தேசிய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்த 9 பிரமுகர்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை தயார் செய்தனர்.

அந்த தகவல் தமிழ்பக்கத்தில் பிரசுரமானதை தொடர்ந்து, கடிதத்தில் கையெழுத்திட்ட த.கலையரசன் எம்.பிக்கு, எம்.ஏ.சுமந்திரன் எம்.பி அழுத்தம் வழங்கியதாகவும், கையொப்பத்தை மீளப்பெற வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு சிக்கலாகி விடும் என்ற அச்சத்தில் த.கலையரசன் அந்த கடிதத்தில் வைத்த கையொப்பத்தை மீளப்பெற்றார். பின்னர் கடிதம் அனுப்பப்படவில்லை.

இந்த கடிதத்தில் கையொப்பமிட்ட 9 பிரமுகர்களிற்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்தினால் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கத்தின் இந்த நடவடிக்கை கட்சியின் அங்கீகாரத்துடன் நடந்ததா என்ற சர்ச்சை தற்போது தமிழ் அரசு கட்சிக்குள் தோன்றியுள்ளது.

கடந்த மாகாணசபை காலத்தில் ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன் அணியில் செயற்பட்டு வந்தார். பின்னர், நடுநிலையாக செயற்படலாமென்ற எதிர்பார்ப்பில் கட்சியின் பதில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், இந்த விளக்கம் கோரும் கடிதம் யாருடைய பின்னணியில் அனுப்பப்பட்டது என்ற சர்ச்சை தற்போது கட்சிக்குள் தோன்றியுள்ளது.

கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஒரு ஊடக சந்திப்பை நடத்தியது. அதில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், எம்.ஏ.சுமந்திரன், குலநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சற்று முன்னதாக அவர்கள் கலந்துரையாடிய போது, கையெழுத்து சர்ச்சை தொடர்பான உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என தமக்குள் பேசிக்கொண்டனர். எனினும், விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதென அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

எனினும், கடிதத்தில் கையொப்பமிட்ட 9 உறுப்பினர்களிற்கும் ப.சத்தியலிங்கத்தினால் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் ஊடக சந்திப்புக்களில் கடித விவகாரங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டு, விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

இந்த சம்பவங்களை கோர்த்து பார்க்கும் போது, விளக்க கடிதத்தின் பின்னணியை ஊகித்தறிய முடியும்.

உறுப்பினர்களிடம் விளக்க கடிதம் கோருவதெனில் முறைப்படியான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் கடிதம் அனுப்பப்படுவதால், அதற்கு யாரும் பதிலளிக்க வேண்டிய தேவையிருக்காது என தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

இப்பொழுது கிட்டத்தட்ட அதேநிலைமைதான் ஏற்பட்டுள்ளது. கையெழுத்திட்ட 9 உறுப்பினர்களில் 8 பேர் விளக்கமளிக்கும் நிலைப்பாட்டில் இல்லை. “எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல் ஒரு குழுவினர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்க வேண்டிய எந்த தேவையுமில்லை.“ என ஒரு பிரமுகர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

கடிதத்தில் முன்னர் கையொப்பமிட்டு, பின்னர் பின்வாங்கிய தேசியப்பட்டியல் எம்.பி த.கலையரசனின் நிலைப்பாடு இதுவரை வெளியாகவில்லை. தேசியப்பட்டியல் ஆசனத்தை பாதுகாக்க, விளக்கம் கோரிய தரப்பை கோபப்படுத்தாமலிருக்க, விளக்கம் அனுப்புவாரா என்பது தெரியவில்லை.

எனினும், இந்த விளக்கத்தை அனுப்ப வேண்டியதில்லை என கட்சியின் உயர்மட்டம் சம்பந்தப்பட்டவர்களிற்கு அறிவித்ததாக தமிழ்பக்கம் அறிந்தது.

ப.சத்தியலிங்கம் அனுப்பிய விளக்க கடிதத்தின் உள்ளடக்கம் வருமாறு-

தமிழ் தேசிய பாராளுமண்ற உறுப்பினர்கள் எனும் கடிதத்தலைப்பில் கையொப்பமிட்டமை.

மேற்படி விடயம் தொடர்பாக ..

ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களிற்கு சமர்ப்பிப்பதற்காக தமிழ்தேசிய பாராளுமண்ற உறுப்பினர்கள் என்று குறிக்கப்பட்ட கடிதத்தலைப்பில் ஓர் கடிதம் வரையப்பட்டு இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் உறுப்பினர்கள் ஒன்பது பேர் கையொப்பமிட்டு அனுப்பியதாக ஊடகங்கள் மூலமாக அறியக் கூடியதாகவுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் கையொப்பமிட்டீர்களா என்பதை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது உள்ள கோவிட் நிலை காரமாக கடிதப்போக்குவரத்து சீராக நடைபெறாமையால் தங்களது பதிலையும் whatsapp, viber அல்லது மின்னஞ்சல் மூலமாக அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
உண்மையுள்ள
மரு.ப.சத்தியலிங்கம்
பொதுச்செயலாளர்(பதில்)
இ.த.அ.க.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment