27.6 C
Jaffna
March 28, 2024
இந்தியா

6 வயது சிறுமியை வன்கொடுமைக்குள்ளாக்கி கொன்ற கொலையாளி பற்றிய தகவலுக்கு பணப்பரிசு!

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிங்கிரேனி காலனியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டுருந்தார்.அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த ராஜு (30) என்பவர் சிப்ஸ் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

விளையாட சென்ற மகள் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி, ராஜு வீட்டுக்கு சென்றது உறுதியானது.

இதைத் தொடர்ந்து ராஜு வீட்டில் சோதனை நடத்திய போது சிறுமியின் உடல் படுக்கையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜு தலைமறைவாகியுள்ளதால் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கூலி வேலை செய்துவரும் ராஜு, மது அருந்தி தினம்தோறும் மனைவியை அடித்து வந்ததால் மனைவியும் , அவரது தாயாரும் பிரிந்து சென்ற நிலையில், தனியாக வசித்து வந்த ராஜு, சிறுமியை கொலை செய்த பிறகு தலைமறைவாகியுள்ளார். ராஜு மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜுவை பிடிக்க போலீஸார் 10 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். ​​ஹைதராபாத், நல்கொண்டா மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் தேடுதலை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு பிறகு கொலை செய்த ராஜு குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகையை ஹைதராபாத்காவல் துறை ஆணையர் அஞ்சனிகுமார் அறிவித்துள்ளார். மேலும் ராஜுவின் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

30 வயதான ராஜு

உயரம்- தோராயமாக5.9 அடி, ராஜுவின் இரண்டு கைகளிலும் மவுனிகா என்ற பெயரை பச்சை குத்தியுள்ளார். மது அருந்தும் பழக்கம் உள்ளதால் பேருந்து நிலையம், சாலைகளுக்கு அருகில் நடைபாதையில் தூங்குவது வழக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு தெலங்கானா மாநில அரசியல் பிரமுகர்கள் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் நேற்று மாலை அந்த வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை பார்க்க நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment