தலைமன்னார் கடற்பகுதியில் சுமார் 9.914 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (14) நடந்த இந்த சம்பவத்தில், 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், படகும் கைப்பற்றப்பட்டது.
தலைமன்னார், உருமலை கடற்பகுதியில், கரையை அண்மித்த படகொன்றை சோதனையிட்ட போது, போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 79 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் டிங்கு படகுகள் என்பவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1