29.4 C
Jaffna
September 23, 2021
இலங்கை

புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்காதவர்களிடம் விளக்கம் கோரவுள்ள தமிழ் அரசு கட்சி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களை சுட்டிக்காட்டி இலங்கை தமிழ் அரசு கட்சியினால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிய கடிதத்துடன் உடன்படாமல், தனியாக கடிதம் அனுப்ப முயற்சித்த உறுப்பினர்களிடம் இலங்கை தமிழ் அரசு கட்சி விளக்கம் கோரவுள்ளது.

கட்சிக்குள்ளோ, கூட்டமைப்பிற்குள்ளோ கலந்துரையாடாமல்- வழக்கம் போல தனித்தவில் வாசித்து- இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் தயாரித்த கடிதத்தில் புலிகளின் போர்க்குற்றம் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டும் கையெழுத்திடவில்லை.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 பிரமுகர்கள் தனியாக கடிதமொன்றை தயாரித்தனர். அவர்கள், புலிகளின் போர்க்குற்றம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், ஈ.சரவணபவன், மட்டு மேயர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.நடராசா ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

எனினும், எம்.ஏ.சுமந்திரன் வற்புறுத்தியதையடுத்து தேசியப்பட்டியல் எம்.பியான த.கலையரசன் தனது கையெழுத்தை வாபஸ்பெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், புலிகளின் போர்க்குற்றத்தையும் சுட்டிக்காட்டி கட்சி அனுப்பிய கடிதத்திற்கு மாறாக, இன்னொரு கடிதம் அனுப்பியமை தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கோர நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இதுவும், புலிகளின் போர்க்குற்ற விசாரணை கோரிய தரப்பினரின் நடவடிக்கையென கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி விதிமுறைகளை பின்பற்றாமல் விளக்கம் கோரும் இந்த நடவடிக்கை பிசுபிசுக்கும் என கட்சியின் பிரமுகர்கள் பலர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நந்திக்கடலில் சுடரேற்றி அஞ்சலி!

Pagetamil

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்: விடுதி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பத் தீர்மானம்!

Pagetamil

புதுமாத்தளன் பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் காயம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!