28.6 C
Jaffna
September 27, 2021
இலங்கை

கொழும்பு லங்கா வைத்தியசாலை கைக்குண்டு: திருகோணமலை இளைஞன் கைது!

கொழும்பு லங்கா வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், திருகோணமலையைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (14) மாலை கொழும்பில் உள்ள லங்கா தனியார் மருத்துவமனையின் முதல் மாடியில் உள்ள கழிவறையில் கைக்குண்டு மீட்கப்பட்டது.

நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ​​விமானப்படை தளபதி ஏயார்மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோர் தற்போது அந்த வைத்தியசாலையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் புலனாய்வாளர்கள், சிசிரிவி காணொளி காட்சிகள் மூலம் வெடிகுண்டை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் திருகோணமலை உப்பாவெளி பகுதியில் வசிப்பவர்.

வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​கைக்குண்டின் பாதுகாப்பு முனை அகற்றப்பட்டு, அதில் ஒரு நுளம்புத்திரியின் ஒரு பகுதியை வைத்து, ரப்பர் பெல்ட்களால் மூடப்பட்டு, அதை எறிவதன் மூலம் உடனடியாக வெடிக்க வைக்கும் நிலையில் காணப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள கட்டுமான பணி மைதானத்தில் சேவைக்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு குற்றப்பிரிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வெளிநாட்டு சக்திகளை அனுமதியோம்: ஜி.எல்.பீரிஸ்

Pagetamil

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும் விடுதலை!

Pagetamil

O/L சித்தியடையாதவர்கள் தீர்மானிக்க முடியாது: கோட்டாவின் குழுவை நிராகரித்தார் கர்தினால்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!