28.6 C
Jaffna
September 27, 2021
முக்கியச் செய்திகள்

லொஹான் ரத்வத்தை பதவிவிலகினார்!

சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சற்று முன்னர் தனது இலாகாவை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.

முன்னதாக, இராஜாங்க அமைச்சர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு லொஹான் ரத்வத்தவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.

இத்தாலியிலிருந்து தொலைபேசியின் ஊடாக லொஹான் ரத்வத்தவை தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்.

விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பணித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் அன்று சென்றிருந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து, அவர்களில் இருவரை முழந்தாளிட வைத்து, தனது கைத்துப்பாக்கியை எடுத்து, சுட்டுக்கொன்றுவிடுவேன் என மிரட்​டியமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2

Related posts

கறுப்பு யூலை நினைவு நாளில் நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Pagetamil

காபூல் விமான நிலையத்தின் வடக்கு வாயிலில் குண்டுவெடிப்பு!

Pagetamil

தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்: தமிழ் அரசு கட்சிக்குள்ளிருந்து தயாரான இரண்டாவது கடித மர்மம் என்ன?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!