சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையில், நண்பர்கள் சிலருடன் வெலிக்கடை சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த அதிகாரிகள் சிலரை தகாத வார்த்தைகளால் திட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி, நடக்கக் கூட முடியாத நிலையில் போதையில் தள்ளாடிய வண்ணம், இராஜாங்க அமைச்சரும் அவரது கூட்டாளிகளும் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்துக்குள் சென்றுள்ளனர்.
சிறைச்சாலை தூக்குமேடையை காண்பிக்கவே நண்பர்களுடன் இராஜாங்க அமைச்சர் அங்கு வந்துள்ளதாக அவரது நடவடிக்கைகளில் தெரிந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் கூறினர்.
குடிபோதையில் வந்த இராஜாங்க அமைச்சரின் குழுவில் பலர் கட்டை காற்சட்டை அணிந்திருந்தனர். முழுமையான ஆடை அணியாமை, மதுபோதை போன்ற காரணங்களால் அவர்கள் உள்ளே நுழைவதை சிறை அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதன்போது இராஜாங்க அமைச்சர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.