29.4 C
Jaffna
September 23, 2021
இலங்கை

கப்ராலின் நியமனத்திற்கு எதிராக மனு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் இன்று (14) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

பிணை முறி மோசடி வழக்கு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரையின் பேரில் அஜித் நிவார்ட் கப்ராலின் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கும்படி மனுவில் கோரப்பட்டுள்ளது.

மனுவில், பிணை முறி மோசடி தொடர்பாக ஆராய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஆணைக்குழுவை நியமித்ததாகவும்,அதன் அறிக்கையில் அஜித் நிவார்ட் கப்ரால் தொடர்பாக பல உண்மைகளை வெளிப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

விசாரணை அறிக்கையின் வெளிப்பாடுகளில் கிரிமினல் முறைகேடு குற்றம் சாட்டப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், அவர் மீண்டும் ஆளுநராக நியமிக்கப்பட்டால் மத்திய வங்கியிலுள்ள சான்றுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையில் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட வேண்டும், மேலும் நிதி சட்டத்தின் பிரிவு 12 இன்படி அஜித் நிவார்ட் கப்ரால் எந்தப் பதவிக்கும் நியமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் பலர் மனு மீதான சமர்ப்பணங்களை முன்வைக்க உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

குருநகர் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா: உறவினர்கள் கொந்தளிப்பால் வைத்தியசாலையில் பரபரப்பு!

Pagetamil

யாழில் முடக்கப்பட்ட இரண்டு கிராமங்களும் நாளை விடுவிப்பு

Pagetamil

80,000 ஃபைசர் தடுப்பூசிகள் வந்தன!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!