யாழ் மாவட்டத்தில் இன்று 68 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனை, அன்டிஜன் சோதனைகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 12 பேர் (2,3,6,8,10 வயது சிறார்களும், உயிரிழந்த 68 வயது பெண்ணும் உள்ளடக்கம்), கோப்பாய் மாவட்ட வைத்தியசாலை 2 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை 2 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 பேர் (இரண்டரை வயது குழந்தையும் உள்ளடக்கம்), யாழ் மாநரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த 84 வயது பெண், நொதேர்ண் சென்ரல் வைத்தியசாலை 2 பேர் என 22 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 2 பேர் (கணவன், மனைவி), முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 2 பேர் என 5 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரிழந்த 78 வயது பெண்ணுக்கு தொற்று உறுதியானது.
மன்னார் மாவட்டத்தில், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர், தொற்றுக்குள்ளாகினார்.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுக்குள்ளாகினார்.
காங்கேசன்துறை கடற்படை முகாமில் 22 பேர், மன்னார் கடற்படை முகாமில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் சோதனையில் 46 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் என 46 பேர் தொற்றிற்குள்ளாகினர்.