26.4 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

சுமந்திரனின் இழுத்தடிப்பினாலேயே பங்காளிகள் எம்முடன் இணைந்து கையெழுத்திட்டனர்: அம்பலப்படுத்தும் சுரேஷ்!

ஜநா அமர்விற்கு முன்னதாக அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆராய்வதற்கு அழைப்பு விடுத்த போது தற்போதைய அமர்வு முக்கியமற்றதென சொல்லிய எம்.ஏ.சுமந்திரன் பின்னராக இரா.சம்பந்தன் ஊடாக ஜநாவிற்கு அனுப்பிய மகஜர் எதற்காக என கேள்வி எழுப்பியுள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன் .

யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில், புலிகளின் போர்க்குற்றம் பற்றியும் சுட்டிக்காட்டும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஐ.நா ஆவணம் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய அவர், பல தடவைகளாக ரெலோ ஊடாக எம்.ஏ.சுமந்திரனுடன் தொடர்புகொண்ட போதும் இழுத்தடிக்கப்பட்டதாலேயே கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள், சி.வி.விக்கினேஸ்வரன் தரப்புடன் இணைந்து மகஜரொன்றை தயாரித்த நிலவரத்தை விளக்கினார்.

இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள்ளிருந்து மற்றொரு ஆவணம் அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி பற்றியும் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சியில் சி.சிறீதரன் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்கள் ஒன்பது பேரது மகஜரை தானே வடிவமைத்து ஒழுங்குபடுத்தியதாகவும் தானும் அதில் ஒப்பமிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் அதேநேரம் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்து போலியாக அம்மகஜரில் இடப்பட்டதாக கூறுகின்றார்.

இதில் ஒப்பமிட்டதாக சொன்ன சி.சிறீதரன் சொல்வது உண்மையா அல்லது அவர் போலியாக ஒப்பமிட்டதாக சொல்லும் எம்.ஏ.சுமந்திரன் உண்மையாவென்பது தெரியவில்லை.

இந்நிலையில் ஊடகங்களை அழைத்து மக்களை ஏமாற்றவும் உட்கட்சி மோதல்கள் தொடர்பில் மக்களிடையே எழுந்துள்ள வெறுப்பை திசைதிருப்பவுமே எம்.ஏ.சுமந்திரன் நாடகம் ஆடியதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை அங்கயன் இராமநாதனிற்கும் எமது விடுதலைப்போராட்டத்திற்கும் தொடர்புகள் ஏதுமில்லையென்பதால் அவர் வாய்மூடியிருப்பது நல்லதென தெரிவித்தார். அவர் அமைதியாக தனது தொழில் முதலீடுகளையும் புதிய தொழில்களையும், வியாபாரத்தை பார்ப்பதும் பொருத்தமானதெனவும் விடுதலைப் போராட்டம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனஅழிப்பு பற்றி வாய் திறக்க அங்கயனிற்கு அருகதை இல்லையென்பதையும் சுரேஸ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தரப்புக்களின் தலையீடுகளினால் ஐ.நாவினால் அரசிற்கு சங்கடங்கள் உருவாகிவிடுமென்பதால், ஆவணங்கள் அனுப்புவதற்கு எதிராக அண்மையில் அங்கயன் இராமநாதன் கருத்து வெளிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment