30.7 C
Jaffna
March 29, 2024
மலையகம்

மஸ்கெலியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு திறப்பு

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு இன்று (10) திறந்து வைக்கப்பட்டது.

அட்டன், கொட்டகலை ரொட்டரக்ட் கழகம் மற்றும் அல்முனை மொரட்டுவ பல்கலைகழக ரொட்டரக்ட் கழகம் அனுசரணையில் இந்த கண்கானிப்பு பிரிவு புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. குறித்த கண்காணிப்பு பிரிவினை மஸ்கெலியா வைத்தியசாலை பொறுப்பதிகாரி எம்.ஆர்.எம் பாஹிமா தலைமையில் இன்று (10) திகதி திறந்து வைக்கப்பட்டது.

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில், பல மில்லியன் ரூபா செலவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 200 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை அரசாங்கமும் கொடைவள்ளர்களும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதில் ஒரு பகுதியாக குறித்த தீவிர கொரோனா நோயாளர் கண்காணிப்பு பிரிவு இயங்கும்.

வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எம்.ஆர்.எம் பாஹிமா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், ரொட்டெக்ட் கழகத்தின் தலைவர் தியாகராஜா யுவராஜன் முன்னாள் தலைவி அர்ச்சனி பஞ்சாட்சரம், இணைப்புச் செயலாளர் சங்கரலிங்கம் ரூபதர்சன், டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர் அருள்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

Pagetamil

விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment